உங்கள் பட்ஜெட் உங்கள் உள்ளங்கையில்மாதச் சம்பளம் அக்கவுன்டில் கிரெடிட் ஆன அடுத்த நிமிஷம் இந்த மாத மளிகை செலவு, பால், வீட்டு செலவு, வேலைக்கு வருபவர்களுக்கான சம்பளம், குழந்தைகளின் பள்ளிக் கட்டணம்... என நாம் பட்ஜெட் போட ஆரம்பிப்பது வழக்கம். என்னதான் பட்ஜெட் போட்டாலும், கடைசியில் துண்டு விழுகிறது என்று நாம் குழம்பிதான் போவோம். சில சமயம் நம்மை அறியாமல் அந்த மாதம் திருமணம் அல்லது மருத்துவ செலவுகள் நம் கண்முன் நிற்கும். அதையும் சமாளிக்க வேண்டி இருக்கும்.

ஒரு வீட்டுக்கான செலவே இப்படி இருக்கிறது என்றால்... ஒரு பெரிய நிறுவனம் அல்லது சிறிய மளிகைக் கடைகளில் தினமும் பெரிய அளவில் வரவுகள் இருக்கும். அதை எல்லாம் எளிதில் கண்காணிக்கவே டிஜிட்டல் முறையில் பல ஆப்கள் பயன்பாட்டில் உள்ளன. இதன் மூலம் உங்களின மாத பட்ஜெட் என்ன என்று தெரிந்து கொள்வது மட்டும் இல்லாமல் எவ்வாறு சேமிக்கலாம் என்றும் கணக்கிடலாம்!

மை கேஷ் புக்

உங்களின் வரவு செலவு மற்றும் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்துபவர்கள் என அனைத்து பரிவர்த்தனை குறித்த தினசரி விவரங்களை நாம் டிஜிட்டல் முறையில் இதில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இதற்காக தனி லெட்ஜர்கள் எல்லாம் நாம் கட்டுக் கட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.

பயன்கள்

*ஒவ்வொரு வாடிக்கையாளர்களை பற்றி அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய முடியும். மேலும் அவர்களுக்கு குறுஞ்செய்தியாக பணம் எப்போது செலுத்த வேண்டும் மற்றும் அவர்களின் வரவு செலவு குறித்த அனைத்து விவரங்களும் தனியாக ஒரு அக்கவுன்ட் போல் பதிவாகிடும். நம்முடைய விவரங்கள் ெதாலைந்து போய்விடும் என்ற பயம் இனி இருக்காது.
*நம்முடைய கணக்கு குறித்த விவரங்களை யாரும் பார்க்காமல் இருக்க அதனை நாம் பேட்டர்ன் கொண்டு லாக் செய்து வைத்துக் கொள்ளலாம்.
*இந்த ஆப் மிகவும் வசதியான முறையில் அமைக்கப்பட்டு இருப்பதால், நாம் பதிவு செய்யும் வரவு கணக்கு குறித்த விவரங்களை நாமே சேர்க்கவும், நீக்கவும் செய்யலாம்.
*இணைய வசதி இல்லாமல் கூட இதனை பயன்படுத்த முடியும்.
*டாஷ்போர்ட் வசதி இருப்பதால், உங்கள் மொத்த கணக்குகள் பற்றிய தகவல்களை ஒரே திரையில் பார்த்துக் கொள்ளலாம்.

கடா புக்

கடா புக்... வேற ஒன்றும் இல்லை, நிதித்துறையில் பயன்படுத்தப்படும் லெட்ஜர் கணக்கு புத்தகம்தான். பொதுவாக அந்தக் காலத்தில் கணக்குப்பிள்ளை என்று இருப்பார்கள். அவர்கள் தங்கள் கையால்தான் வரவு செலவுகளை பதிவு செய்வார்கள். அதில் சில சமயம் தவறும் நடக்க வாய்ப்புள்ளது. இனி அந்தக் கவலை தேவையில்லை. எல்லாமே டிஜிட்டல் முறையில் வந்துவிட்டது. கடா புக் என்ற ஆப்பினை உங்கள் போனில் டவுண்லோட் செய்தால் போதும் அதன் மூலம் உங்கள் வரவு செலவுகளை எளிதில் சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும் இது எல்லாமே கணினி மயம் என்பதால், நம் வாடிக்கையாளர்களின் கணக்குகள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கும்.

சிறப்பம்சங்கள்

*ஒவ்ெவாரு பரிவர்த்தனை செய்யும் போதும் அது குறித்த குறுஞ்செய்தி உங்கள் மொபைலுக்கு வந்திடும்.
*எல்லா கணக்கு வழக்குகள் குறித்த பிரதி இதில் ஆட்டோமேட்டிக்காக சேமிக்கப்படுவதால், அவை எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்.
*கட்டணம் செலுத்துவது குறித்த செய்தியினை வாட்ஸப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நினைவுபடுத்தப்படும்.
*பல கடைகளின் கணக்கு வழக்குகளை இந்த ஒரே ஆப் மூலம் நாம் கண்காணிக்கலாம்.
*வாடிக்கையாளர்களை நேரடியாக தொடர்புகொண்டு அவர்களுக்கு பாக்கியுள்ள தொகை குறித்து விவரம் தெரிவிக்கலாம்.
*எங்கிருந்தும் எளிதாக பயன்படுத்தக்கூடியது.
*டிஜிட்டல் முறை என்பதால், 100 சதவிகிதம் துல்லியமாக கணக்கிடுவது மட்டும் இல்லாமல் நம்பகமானதும் கூட.
*மொபைல் கடைகள், மளிகைக் கடைகள், பேக்கரி, ஸ்வீட்ஸ் கடை, நகைக்கடை, மருந்து கடை, துணிக்கடை, டீக்கடை போன்ற கடைகள் தங்களுக்கான கணக்கு குறித்த விவரங்களை இந்த ஆப் கொண்டு செயல்படுத்திக் கொள்ளலாம்.

அலெக்ஸ் ஃபினான்ஸ்

பணம் வருகிறது... எப்படி செலவாகிறது என்று தெரியவில்லை என்பதுதான் பலரின் புலம்பலாக உள்ளது. இனி அந்தக் கவலை இல்லை. காரணம், உங்களின் வைப்பில் இருக்கும் பணம் முதல் செலவு செய்வது வரை அனைத்தும் அலெக்ஸ் ஃபினான்ஸ் ஆப் மூலம் கண்காணிக்க முடியும். மேலும் இதில் பல துணைப் பிரிவுகள் இருப்பதால், நம் செலவுக்கு ஏற்ற பிரிவுகளை பிரித்துக் கொள்ளலாம். இதன் மூலம் நாம் எதற்கு செலவு செய்து இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

சிறப்பம்சங்கள்

*உங்கள் மொபைல் போனில் மட்டும் இல்லாமல், லேப்டாப் மற்றும் டெஸ்டாப்பிலும் இந்த ஆப்பினை பயன்படுத்தலாம்.
*தொடர்ச்சியாக செய்யப்பட்ட பரிவர்த்தனை குறித்த விவரங்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் பெறலாம்.
*உங்கள் அக்கவுண்டினை பாஸ்வேர்ட் கொண்டு பத்திரப்படுத்தலாம்.
*உங்கள் வசதிக்கு ஏற்ப நீங்கள் துணைப் பிரிவுகள் அதாவது, கிரெடிட் கார்ட், வங்கிக் கணக்கு, பர்சனல் லோன் என பிரித்துக் கொள்ளலாம்.
*ஒவ்வொரு மாத இறுதியிலும் உங்களின் கணக்கு வழக்கு குறித்த அறிக்ைககள் வெளியிடப்படும். அதன் மூலம் உங்களின் வரவு செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

பட்ஜெட்

நம் கையில் இருக்கும் காசு சரியான முறையில் செலவாவது குறித்து தெரிந்துகொள்ள பட்ஜெட் ஆப் பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்களின் தனிப்பட்ட செலவுகளை நாம் கன்ட்ரோல் செய்ய வசதியாக இருக்கும். மேலும் இது ஆப் என்பதால் இதனை உங்கள் போனில் டவுண்லோட் செய்து கொள்ளவும் முடியும்.

பண வரவு என்பது நம்முடைய சம்பளம் மட்டுமே என்று சொல்லிட முடியாது. சில சமயம் நாம் வெளியே யாருக்காவது கடன் கொடுத்து இருப்போம். அந்த தொகை திரும்ப வரும் அல்லது நம் வீட்டில் இருந்து செலவுக்காக பணம் அனுப்பி இருப்பார்கள். இது போல் வரும் பணத்தை நாம் சரியான முறையில் செலவு செய்ய வேண்டும். அதற்கான வழிகாட்டிதான் பட்ஜெட்.

உங்களுக்கான இந்த மாத பட்ஜெட் என்ன என்று நீங்கள் நிர்ணயித்துக் கொள்ளலாம். அதற்குள் மட்டுமே செலவு செய்ய இந்த பட்ஜெட் ஆப் மூலம் கற்றுக் கொள்ளலாம். மேலும் நீங்கள் என்ன செலவு செய்கிறீர்கள் என்று அவ்வப்போது உங்களுக்கு குறுஞ்செய்தி மூலம் செய்தி அனுப்பப்படும். இதன் மூலம், நீங்கள் தேவையில்லாத செலவினை கட்டுப்படுத்த மிகவும் வசதியாக இருக்கும்.

இதில் உள்ள முக்கிய சிறப்பு அம்சம் நீங்கள் இந்த பட்ஜெட் முறையில் உங்களின் செலவுகளை கட்டுப்படுத்தும் போது, எதிர்காலத்தில் உங்களின் சேமிப்பு எவ்வாறு இருக்கும் என்று கணித்து அதன் மூலம் உங்களின் சேமிப்பை அதிகரிக்கலாம்.

எல்லாவற்றையும் விட உங்களின் வரவு செலவுகளை நீங்கள் மட்டுமே கண்காணிக்க முடியும். மற்றவர்கள் அதனை பார்க்க முடியாதபடி பாதுகாப்பு வளையங்களை நாமே அமைத்துக் கொள்ளலாம்.

மந்த்லி எக்ஸ்பென்ஸ்

உங்களின் மாதாந்திர நிதி விவரங்கள் மற்றும் பட்ஜெட்களை மந்த்லி எக்ஸ்பென்ஸ் ஆப் மூலம் டிராக் ெசய்யலாம். உங்களின் வருமானத்திற்கு ஏற்ப அந்த மாத பட்ஜெட் என்ன... அதை எவ்வாறு சமாளிக்கலாம் என்று எல்லாம் இதன் மூலம் கணக்கெடுக்கலாம். மேலும் பொருளாதார ரீதியாக
கணக்கிட்டு செய்யும் போது, நம்முடைய வரவு செலவுகளை எல்லாம் சமாளிப்பது மட்டும் இல்லாமல் சேமிக்கவும் செய்யலாம்.

அம்சங்கள்

*தினமும் நாம் ஒரு பத்து ரூபாய் செலவு செய்தாலும் இதில் குறிப்பிடலாம். அதன் பிறகு அந்த வாரத்திற்கான செலவுகள் என்ன என்று எளிதாக பட்டியலிட வசதியாக இருக்கும்.
*மாத செலவு என்பது தவிர்க்க முடியாதது. சில சமயம் அந்த மாதம் புதிதாக ஒரு செலவு நமக்கு ஏற்படும். அந்த சமயத்தில் நம்முடைய பட்ஜெட் கடிக்காமல் இருக்க இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
*இந்த ஆப்பில் உங்களின் பில்கள் குறித்த விவரங்களை நாம் பதிவு செய்யலாம். குறிப்பிட்ட தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே உங்களுக்கு அதற்கான அறிவிப்பு வந்திடும்.
*ஒரு குறிப்பிட்ட மாதம் உங்களின் தேவை என்ன என்று நீங்கள் தனியாக குறிப்பிட்டு வைக்கும் வசதியும் உள்ளது.
*உங்களின் கணக்கு விவரங்கள் பாதுகாப்பாக இருக்க அதை நீங்கள் பாஸ்வேர்ட் கொண்டு லாக் செய்து வைக்கலாம்.
*உங்களின் விவரங்கள் தொலைந்து போகாமல் இருக்க, அதற்கான பேக்கப் வசதியும் இதில் உள்ளது.

கார்த்திக் ஷண்முகம்