ப்ரியங்களுடன்...காரடையான் நோன்பினால் என்னென்ன நன்மைகள், நோன்பினை ஏன் மேற்கொள்ள வேண்டும் என்று பல விஷயங்களுக்கு அருமையான பதில்கள் கிடைத்தன.
- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.

உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கொள்கையில் ‘செய் அல்லது செத்துமடி’ என வாழும் பத்மபூஷன் கிருஷ்ணாம்பாள் வாழ்க்கை பிரமிப்பானது. அவரைப்போல ஊருக்கு ஒரு பெண்மணி இருந்தால் போதும் விமோசனம் பிறக்கும்.
- மல்லிகா அன்பழகன், சென்னை.

கோடை விடுமுறையில் முதன்முதலாக குடும்பத்தோடு திருப்பதி செல்ல திட்டமிட்டுள்ள எங்களுக்கு வழியில் நல்ல உணவகத்தை அடையாளப்படுத்தியதற்கு நன்றி. ஐ.நா. சபை வலியுறுத்திய பெண்ணுரிமைக்கான ஐவகை கண்டுபிடிப்புகள் மூலம் இன்னும் உயர பெண்கள் தினத்தில் சபதம் எடுப்போம்.
- யாழினி பர்வதம், சென்னை.

சங்கீத சகோதரிகளின் இசையால் இணைந்த இதமான கருத்துக்கள் ஸ்வரமாய்... லயமாய் லயிக்க வைத்தது.
- கவிதா சரவணன், ரங்கம்.

உற்பத்தி செய்யும் பொருட்கள்தான் சிறுதொழில் என்று நினைத்தேன். ஆனால் சிலம்பம் கற்றுக்கொண்டு அவற்றை பலருக்கு கற்றுக்
கொடுத்து அதன்மூலம் வருமானத்தை ஈட்டுவது வியப்பை அளித்தன. ஆண்களால் மட்டும்தான் இது முடியும் என்று கூறுபவர்களுக்கு
பெண்களாலும் முடியும் என்று முறியடித்தது ரியலி தி கிரேட்!
- வண்ணை கணேசன், சென்னை.

‘உணவே மருந்து’ பகுதியில் உடலுக்கு உரமாகும் பொட்டுக்கடலையில் இவ்வளவு சத்துக்கள் இருப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டேன்.
- வரலட்சுமி முத்துசாமி, சென்னை.

இலவச இணைப்பான (30 சைட்டிஷ் வகைகள்) இல்லந்தோறும் குறிப்பாக சைட்டிஷ் பிரியர்களது இல்லங்களில் அவசியம் இருக்க வேண்டிய அத்தியாவசியமான சமையற்கூட கையேடாக அமைந்திருந்தது.
- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி.

‘‘பெரியார் இல்லையெனில் பெண் விடுதலை சாத்தியமில்லை’’ என பெண்கள் தின சிறப்பிதழில் சுட்டிக்காட்டியது யார் மறந்தாலும் தோழி பெரியாரை மறக்காமல் பாடம் சொன்னதற்கு சூப்பர் நன்றி!
- புலவர். தியாக சாந்தன், திருச்சி.

‘மகளிர் தின ஸ்பெஷல்’ 9-ம் ஆண்டு தோழிகள் பிறந்த நாளாய் மலர்ந்து ‘டூ இன் ஒன்’ சிறப்பிதழாய் சிறப்பு சேர்த்தது.
- மயிலை கோபி, அசோக்நகர்.