ஆப்பிலும் டிரேடிங் செய்யலாம்!
ெபண்கள் படித்து விட்டு வேலைக்கு செல்வது இப்போது சகஜமாகிவிட்டது. ஆனால் அதுவே திருமணமாகிவிட்டால் குடும்பம் குழந்தைன்னு பொறுப்புகளை சுமக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இதில் பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்வதை தவிர்த்துவிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் குழந்தைகள் வளர்ந்து அவர்களின் வேலையை அவர்களே பார்த்துக் கொள்ள ஆரம்பித்த பிறகு இவர்களுக்கு என்ன செய்வதுன்னு புரிவதில்லை.
அப்போது, நாமும் வேலைக்கு சென்று இருக்கலாமோன்னு நினைக்க ஆரம்பிக்கிறார்கள். காலம் கடந்து விட்டதால் இவர்களால் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்ல முடியாத நிலை. வேலைக்கு போக ேவண்டும் என்றால் ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு தான் செல்ல வேண்டுமா என்ன? அதற்கான அவசியம் இனி இல்லை. வீட்டில் இருந்தபடியே இனி அவர்கள் சம்பாதிக்கலாம். அதற்காகவே சில ஆப்(app)கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆப்களை உங்களின் செல்போனில் டவுன்லோட் செய்தால் போதும்... உங்களுக்கான ஒரு வேலையை நீங்களே அமைத்துக் ெகாள்ள முடியும்.
உடான் (Udaan)
உடான் பிசினஸ் டூ பிசினஸ் முறையில் சிறிய அளவில் தொழில் செய்வதற்காக பயன்படும் ஆப். இந்த ஆப் மூலம் இந்தியாவில் உள்ள வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அனைவரையும் ஒரே தளத்தில் நாம் சந்திக்க முடியும். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உடான் உங்களின் தொழிலை வளமாக்க உதவுகிறது.
இந்த ஆப் மூலம் வாடிக்கையாளர்களை கண்டறியலாம். மேலும் பலதரப்பட்ட பொருட்களை விநியோகம் செய்பவர்கள் மற்றும் விற்பனையாளர்களை நாம் நேரடியாக ெதாடர்பு கொள்ளலாம். அதன் பிறகு அவர்களிடம் நாம் எந்த ஒரு தரகர் இடையூறு இல்லாமல் நேரடியாக பொருட்களை கொள்முதல் செய்து அதனை நாம் விற்பனை செய்யலாம். இதன் மூலம் உங்களின் தொழில் சார்ந்த அனைவரின் நட்பும் உங்களுக்கு கிடைக்கும் என்பதால், தொழிலும் எளிதாக செய்ய முடியும்.
இந்தியா முழுக்க 28 மாநிலங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட விற்பனையாளர்கள், வர்த்தகர்களை உடான் மூலம் தொடர்பு கொள்ள முடியும். அதன் பிறகு அவர்களின் நேரடியான பொருட்களை மொத்த விற்பனையில் பெற்று உங்களின் வாடிக்கையாளர்களிடம் லாபத்துடன் விற்பனை செய்யலாம். ஒரு பட்டனை தட்டினால் போதும் ஆன்லைன் மூலமாக நீங்களும் ெதாழிலதிபராகலாம்.
பிசினஸ் பட்டீ (BusinessBudie)
சிறிய நகரமோ அல்லது மெட்ரோபாலிடன் நகரமோ எதுவாக இருந்தாலும் பிசினஸ் பட்டீ மூலம் உங்களின் தொழில் சார்ந்த அனைத்து ேதவைகளையும் பூர்த்தி செய்கிறது. புடவைகள் முதல் ஆர்டிபீசியல் நகைகள் மட்டும் இல்லை எந்த பொருளாக இருந்தாலும் அதற்கான மொத்த விற்பனையாளர்கள் அனைவரின் விவரமும் இந்த ஆப்பில் பட்டியலிடப்பட்டு இருக்கும்.
நீங்கள் என்ன தொழில் துவங்க இருக்கிறீர்களோ அதற்கான பொருட்களை மொத்த விற்பனையில் நீங்கள் கொள்முதல் செய்துகொள்ளலாம். அதன் பிறகு நீங்கள் இதனை உங்களின் கடையில் விற்பனை செய்யவோ அல்லது ஆன்லைன் மூலமாகவும் உங்களின் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யலாம். முதலில் இந்த ஆப்பினை உங்களின் ெசல்போனில் தரவிறக்கம் ெசய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுக்கான ஒரு கணக்கினை துவங்க வேண்டும். உங்களின் கணக்கு பதிவான பிறகு உலகில் எந்த மூலையில் இருந்தும் எந்த நேரத்திலும் நீங்கள் பொருட்களை பெற்று அதை விற்பனை செய்யலாம். ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் விலாசத்திற்கு வந்தடைந்திடும். இதன் மூலம் நீங்கள் ஒரு தொழில் மட்டுமல்ல எவ்வளவு தொழில் வேண்டும் என்றாலும் ஆன்லைன் மூலமாகவோ அல்லது உங்களுக்கான ஒரு கடையை நிர்வகிக்கவோ செய்யலாம்.
பிக் டிரேட் (Big Trade) இதுவும் பிசினஸ் டூ பிசினஸ் டிரேடிங் ஆப் தான். இந்தியா முழுக்க உள்ள மொத்த விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் கொள்முதல் செய்பவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று திரட்டும் ஆப். இதனை சிறிய முதல் பெரிய விற்பனையாளர்கள், ஆன்லைனில் ெதாழில் செய்பவர்கள் மற்றும் வீட்டில் இருந்தே சிறுதொழில் செய்யும் பெண்கள் என யார் வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆப் மூலம் 1000த்துக்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் பற்றிய பட்டியல் இருப்பதால், நமக்கு என்ன வேண்டும் என்று தேர்வு செய்து கொள்ள முடியும்.
இந்த ஆப்பினை உங்களின் செல்போனில் டவுன்லோட் செய்த பிறகு இந்தியா முழுக்க எந்த பொருளை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் மற்றும் அவற்றின் மொத்த விற்பனையாளர் என்பது குறித்த தகவலும் தெரிந்து கொள்ள முடியும். இதில் மொபைல் போன்கள், அதன் உபகரணங்கள் மற்றும் எல்லா விதமான எலேக்ட்ரானிக் பொருட்களின் பட்டியல் உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஒரு விரல் அழுத்தத்தில் நீங்களும் ஒரு தொழில்முனைவோராக மாறலாம்.
பிக் டிரேட் டிரேடிங் ஆப் மொபைல் போன்கள் மற்றும் அதன் உபகரணங்களை மொத்த விற்பனையில் அளிக்கக் கூடியது. இதில் மொபைல் போன்களுக்கு தேவையான டெம்பர் கண்ணாடிகள் முதல் ஹெட்போன்கள், ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் என அனைத்தும் மொத்த விற்பனைக்கு கிடைக்கும்.
இப்போது இவை இல்லாமல் யாருமில்லை. அதனால் இதனை மொத்த விலையில் பெற்று ஆன்லைன் மூலமாக நீங்கள் விற்பனை செய்யலாம். மேலும் லானஸ்டிக் நிறுவனத்துடன் இவர்களுக்கு டையப் இருப்பதால், நீங்கள் கேட்ட பொருட்கள் உங்கள் வீடு தேடி வந்தடையும் என்பதில் சந்தேகமில்லை. இருக்கும் இடத்திலேயே தொழில் செய்ய இந்த ஆப் மிகவும் பயனுள்ளது. ஷாப்பர்ட்ஸ் (Shopperts) மறு விற்பனைப் பயன்பாட்டிற்குத் தேடுகிறீர்களா? தரமற்ற பொருட்கள், அறியப்படாத சப்ளையர்கள் பற்றி இனி கவலை வேண்டாம். ஷாப்பர்ட்ஸ் ஆப் மூலம் 100க்கும் மேற்பட்ட சப்ளையர்களை இந்த ஆப் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும். இது முழுக்க முழுக்க மறு விற்பனைக்கான ஆப் என்று சொல்லலாம். இதில் விற்பவர்கள் பெறுபவர்கள் மட்டுமே பொருட்களை தகுந்த விலைக்கு பரிமாறிக் கொள்ளலாம். இடைத்தரகர்களுக்கு இதில் இடமில்லை. எந்த ஒரு இன்வெஸ்ட்மென்ட் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க முடியும்.
இந்தியாவின் நம்பர் ஒன் மறு விற்பனையாளர் பயன்பாடு கொண்ட ஷாப்பர்ட்ஸ் மூலம் நேரடியாக வாட்ஸ்சப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் மறு விற்பனை செய்ய முடியும். அதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையானவை. முதலில் ஷாப்பர்ட்ஸ் ஆப்பினை உங்கள் கைபேசியில் தரவிறக்கம் செய்யுங்கள். அதன் பிறகு மக்களிடம் அதிகமாக விற்பனையாகும் பொருட்களை என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
விரும்பிய பொருட்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது உங்க கைபேசியில் தெரிவிக்கப்படும். அதனை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஷேர் செய்யுங்கள். நீங்கள் அனுப்பும் பொருட்களில் ஏதேனும் ஒன்று யாருக்காவது தேவைப்படும். அந்த விவரங்களை பெற்று பொருட்கள் ஆர்டர் செய்யுங்கள். இவ்வாறு மறுவிற்பனை செய்யும் போது உங்களுக்கான மார்ஜின் லாபத்தை பெற முடியும். பணம் உங்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுவதால், இதில் யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது. வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் நேரடியாக அவர்களை சென்று அடைந்துவிடுவதால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே சம்பாதிக்க முடியும்.
ரீடெயிலர் ஷக்தி (RetailerShakti) தொழில்நுட்பம் மற்றும் நிதிகளின் பகுதியாக அன்னிய விற்பனையாளர்களை அதிகரிக்க ஒரு தளம் ரீடெயிலர் ஷக்தி. வேதியியலாளர், மருந்துக் கடை, கிரானா, பார்மசி சம்மந்தமான அனைத்து பொருட்களும் சில்லறை விற்பனையில் ஒரே இடத்தில் இந்த ஆப் மூலமாக பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த ஆப்பினை தரவிறக்கம் செய்வதால் நாம் பல பயன்பாட்டினை அனுபவிக்கலாம்.
*நியாயமான விலையில் மொத்த விற்பனைக்கு பொருட்களை வாங்கலாம். *பயன்படுத்தும் முறை எளிது மேலும் விநியோகமும் சுலபமாக குறிப்பிட்ட விலாசத்திற்கு நேரடியாக வந்தடையும். *அவ்வப்ேபாது சில சலுகைகளும் வழங்கப்படும். *வெளிப்படையான, விரைவான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் பொருட்களை கொள்முதல் செய்து ெகாள்ளலாம். *24 மணி நேரம் எப்போது வேண்டும் என்றாலும் ஆர்டர் அளிக்கலாம். *40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொருட்கள் மற்றும் 120 வகைகள் ஒரே இடத்தில் கிடைக்கும். *சிறந்த பொருட்கள் தரமான விலையில் பாதுகாப்பான முறையில் கொள்முதல் செய்யலாம்.
இதுவும் பிசினஸ் டூ பிசினஸ் ஆப் என்பதால் நேரடியாக தயாரிப்பாளர்களிடம் அல்லது விநியோக மையத்திலிருந்து நேரடியாக சில்லறை விற்பனையாளர் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். சில்லறை வணிகம் என்றாலும் இதில் பெறப்படும் அனைத்து மருந்து பொருட்களும் தரமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது மருந்துகள், மருத்துவ பொருட்கள், வீட்டுப் பொருட்கள், மொத்த மளிகை ெபாருட்கள், கழிப்பறைகள் மற்றும் துப்புரவு, சுகாதார பொருட்கள், ஃபேஷன் ஆபரணங்கள்... மற்றும் பல இதில் உள்ளன. இதில் பிராந்திய, தேசிய அளவில் விற்பனையில் இருக்கும் பொருட்கள் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் மார்க்ெகட்டில் விற்பனைக்கு இருக்கும் பொருட்களை சில்லறை அல்லது மொத்த விலைக்கு மொத்தமாக பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். வியாபாரத்தை எளிதாக்கவும் சில்லறை விற்பனையாளர் பயன்பாட்டினை அதிகரிக்கவும் இந்த ஆப் மிகவும் சிறந்தது.
கார்த்திக் ஷண்முகம்
|