கண்ணழகில் அந்திக் கவிதைகள்கொதிக்கும் வெயிலின் தாக்கம் அந்தியிலும் அனல் குறையாமல் பார்த்துக் கொள்கிறது. மேக்கப் போட்ட சில மணி நேரங்களில் வெயிலின் தாக்கம் நம் முகப்ெபாலிவை டல்லடிக்கச் செய்து விடுகிறது.
நாம் உடுத்தியிருக்கும் வேலைப்பாடுகள் மிகுந்த உடை, விலை உயர்ந்த நகைகள் அனைத்தின் அழகும் நம் முக மலர்ச்சியை நம்பியே உள்ளது. நமது புன்னகையில் ஒரு டிகிரி குறைந்தாலும் இவை அனைத்துமே பயனற்றதாகிவிடும். இந்த வெயிலிலும் மேக்கப்பிற்கும் அதிக முக்கியத்துவம் தரவேண்டியுள்ளது. பர்ஃபெக்ட் லுக் நம் புன்னகையின் வசீகரத்தை அதிகரிக்க செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இது தானே வேண்டும் ஒவ்வொரு பெண்ணுக்கும்.

வியக்க வைக்கும் வெயில் காலத்துக்கென்றே டிசைன் செய்யப்பட்ட ‘சன்செட் மேக்அப்’ இதோ டிரெண்டிங்கில் உள்ளது. கோடை கால விடுமுறைக் காலத்தில் கேளிக்கை விருந்துகள், பார்ட்டிகள் மற்றும் கடற்கரை சுற்றுலா என கொண்டாட்டம் களை கட்டி விடும். காற்றோட்டமுள்ள பருத்தி ஆடைகளையும் மற்றும் குளிர் கண்ணாடிகளையும் பெட்டிகளிலிருந்து தேடி எடுத்து தூசி தட்டி பயன்படுத்துவதற்கான நேரமாகவும் கோடைகாலம் இருக்கிறது. ஏராளமான உற்சாகத்தை கோடைகாலம் கொண்டு தரும்.

அதே சமயம் புதிய நவநாகரிக போக்கிற்கு ஏற்ப உங்களை டிரெண்டில் வைத்துக்
கொள்ள வேண்டிய நேரமும் இதுவேயாகும். இப்போது அழகியல் உலகை கலக்கிவரும் புதிய டிரெண்டாக ‘சன்செட் மேக்அப்’ களம்
இறங்கியிருக்கிறது.  

கண்கவரும் இப்புதிய மேக்கப், கோடை காலச் சூரியன் மேற்கில் மறையும்போது வானத்தில் அந்தி வரைந்து காட்டும் வண்ணக் கவிதைகளை இமைகளில் பார்ப்பது போன்ற உணர்வை பிரதிபலிக்கும். கதகதப்பான மஞ்சளுடன் துடிதுடிப்பான ஆரஞ்சு நிறத்தை மிக நேர்த்தியாக கலந்து வழங்குகிறது. முக்கியமாக, கண் சார்ந்த ஒரு மேக்கப் டிரெண்டான சன்செட் தோற்றம், படிப்படியாக டார்க் ஷேடுகளிலிருந்து லைட் ஷேடுகளுக்கு குறையும் பல பாங்குடைய ஒரு தோற்றமாக இருக்கும். இந்த 2019 கோடையின் வெயிலை எதிர்கொள்வதற்கு மூன்று வேறுபட்ட சன்செட் கண் மேக்கப் குறித்து கிரீன் டிரெண்ட்ஸ் யூனி செக்ஸ் ஹேர் அண்டு ஸ்டைல் சலூனின் ஸ்டைலிஸ்ட் மற்றும் பிராண்டு ட்ரெய்னர் வன்லால்முவான்புய் தனது கருத்தை கீழே பகிர்ந்துகொள்கிறார்.

‘‘உங்களது முகத்தில் உயிர்ப்பான பகுதியே கண்கள் தான். கண்களால் புன்னகைக்கவும், எந்த வார்த்தைகளும் இன்றிப் பேசிடவும் முடியும். அழகிய கண்கள் அனைவரையும் உங்கள் பக்கம் திருப்பும். அனைவரையும் விழிவிரிய வைப்பதற்கான சன்செட் மேக்கப் வகைகள் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.

சிம்பிள் ப்ளாக் லைன்டு சன்செட் மேக்கப்பணி நேரத்திற்குப் பிறகு நடைபெறும் பார்ட்டியா? இந்த சிம்பிள் ப்ளாக் லைன்டு சன்செட் என்பது தான் நாம் அனைவரும் ஆசைப்படும் சரியான வேலை-வாழ்க்கை சமநிலை ஆகும். இரண்டு தருணங்களுக்கும் உகந்ததாக இந்த மேக்கப் திகழ்வது குறிப்பிடத்தக்கது. ஈர்க்கும் வெளிர் தங்க நிறத்தை அடிப்படை நிறமாகக் கொண்டு அதை பிரகாசமான ஆரஞ்சு நிறத்துடன் கலந்து கண் இமையில் தீட்டுவதன் மூலம் அந்த தோற்றத்தை அடைய முடியும். ஒரு  நுணுக்கமான வரையறுக்கப்பட்ட லைனரைக் கொண்டு, லேஷஸ் சேர்த்து அருமையான ஃபினிஷ் கொடுத்து இதை நிறைவு செய்யலாம்.
 
டஸ்டடு சன்செட் ஸ்மோக்கி மேக்கப்

புகை மூட்ட சாம்பல் நிற கண்களை யாருக்குத்தான் பிடிக்காது? இந்த முறை மட்டும், டார்க் கலர்களுக்குப் பதில் கண்ணின் உட்புற மூலைகளில் வெளிர் பீச்-ஆரஞ்சு சாயல், வெளி மூலையில் பிரவுன் டோன் மற்றும் கட் கிரீஸ் கொண்ட இந்த ஸ்மோக்கி ஐ மேக்கப் உங்களை புதிய பரிசோதனைகளை செய்து பார்க்க அனுமதிக்கிறது. இது அனைத்தும் சரும வகைப்பிரிவினருக்கும் மற்றும் அனைத்து தருணத்திலும் பொருந்தும் என்பதால் இது மிகச்சிறப்பான மேக்கப்பாக திகழும் என்பது நிச்சயம்.  

ஷைனிங் ஸ்டார் சன்செட் மேக்அப்

கோடைகால இரவுநேர விருந்துக்கு ஒரு சரியான உகந்த தோற்றத்தைக் கொடுக்கும் ஷைனிங் ஸ்டார் சன்செட் மேக்அப். அதே சமயம் ஒரு எடுப்பான, தைரியமான கவர்ச்சி மொழியை இந்த மேக்கப் மூலம் கண்கள் பேசும். மெட்டாலிக் ஷேடுகளுடன் தங்க வெண்கலம் சேர்ந்த ஒரு அழகிய, அருமையான கலவை ஒரு சில நொடிகளுக்குள்ளேயே உங்கள் ஒட்டுமொத்த தோற்றத்தையும் மேம்படுத்தி ஒளிரச் செய்கிறது.

கூடுதல் மெருகு கிடைப்பதற்கு ஒரு ஈரமான பிரஷ் பயன்படுத்தி சாய்வு முறையில் பிரவுன் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணங்களுடன் ஒரு வெளிர் தங்க மெட்டாலிக் ஷேட்-ஐ ேசர்க்கும் போது அது கண்களுக்கு மேலும் அழகூட்டும். கண்களை மேலும் கவர்ச்சியாக காட்டுவதற்கு கீழ் இமைகளுக்கு அடியில் ஒரு மெட்டாலிக் ஸ்டார் சேர்க்க மறக்க வேண்டாம். மஞ்சளும், ஆரஞ்சு வண்ணமும் தங்க நிறத்துடன் இணைந்து உங்களது கண்களில் மாலை நேரச் சூரியனை ஒளிரச் செய்யும். ஒவ்வொரு முறை நீங்கள் இமைக்கும் போதும் உங்கள் பார்வையில் அந்தியின் மாயங்கள் ஒட்டிக் கொள்ளும். அழகைக் கொண்டாடுங்கள். சன்செட் அழகில் மயங்கிடச் செய்யுங்கள்!

யாழ் ஸ்ரீதேவி