ப்ரியங்களுடன்



பரிசு தருவதில் க்ரியேட்டிவாக யோசித்து வடிவமைத்து தரும் ஸ்ருதியைப் பற்றி படித்து வியந்தோம். இனி எங்களுக்கும் பரிசுகளை புதிதாக கொடுப்பதற்கு தீர்வு கிடைத்துள்ளது.சுற்றுலா ஆப்பை பற்றி படித்ததும் மகிழ்ச்சியில் திளைத்தோம். இவ்வளவு ஆப்களா? என்று வியந்தோம் அதைப் பயன்படுத்தி இனி சுற்றுலாவை சிறப்பாக்கிட முடிவு செய்து விட்டோம்.
- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

சம்மரை சமாளிங்க.... பகுதியில் அழகுக்கலை நிபுணர் ஹேமலதா அவர்கள் சொன்ன அறிவுரைகள் அனைத்துமே மிக மிக பயனுள்ளதாக இருந்தது.
- வத்சலா சதாசிவன், சென்னை.

தோழி சாய்ஸ்-ன் அத்தனை அம்சங்களும் கண்களைக் கவர்ந்தது,ஆர்வத்தைத் தூண்டியது. உணவே மருந்து வாசிக்க ஏற்றதாக உள்ளது. ‘தெருக்கட’ ஒவ்வொரு ஊரிலும் ஒரு கடை இருந்தால் மக்களின் ஆரோக்கியம் சிறப்பாவது உறுதி
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

‘வல்லமை தாராயோ’ உருவம்தான் வேறுபாடு உழைப்பில் இல்லை மாறுபாடு ஆட்டோ டிரைவர் ஜெயந்தியின் பேட்டி, உண்மையில் மனதில் தன்னம்பிக்கை மற்றும் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டச் செய்கிறது. உழைப்பு இருந்தால் கண்டிப்பாக முன்னேறலாம் என்பதற்கு ஜெயந்தி ஒரு உதாரணம்.
- வண்ணை கணேசன், சென்னை.

கோடை விடுமுறை, கோடையை குளிராக்க பானங்கள், சிறுதானிய கூழ் உணவுகள்.. ஒரு மல்டி பர்பஸ் டைரி!
- மயிலை கோபி, திருவாரூர்.

ஒரு மாத இடைவெளி இரண்டாவது பிரசவம், குழந்தைகள் மூன்று! அடடா இந்தத் தகவல் செய்தி உண்மையிலேயே அதிசயமான
ஆச்சரியமான ஒன்று என்றாலும், உண்மை தானே. பிரசவித்த தாய்க்கு வாழ்த்துகள்.
- மூர்த்தி, பெங்களூர்.

நடிகை விஜயகுமாரி கடந்து வந்த பாதை, அவரது சாதனை படித்து நெகிழ்ந்தேன். அவருடைய ஆற்றலுக்கு உரிய மரியாதையை சமூகம் கொடுக்க மறந்து விட்டது என்பதை உணர்ந்தேன்.!
 -ஆர்.கே. லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

‘‘தடாகத்தில் மிளிரும் நீச்சல் தாரகை’ என்ற கவித்துவமான தலைப்பில் நீச்சல் போட்டிகளில் சாதனை புரிந்து வரும் தமிழ் முல்லையின் பேட்டிக் கட்டுரை வியப்பில் மூழ்கடித்து விட்டது. ‘ஒலிம்பிக்கில் அவர் தங்கம் வெல்ல வாழ்த்துகள்.’
 - த.சத்தியநாராயணன், அயன்புரம்

அட்டையில்: அஷிமா நார்வால்

படம்: ஆண்டன் தாஸ்