நலம் காக்கும் எலுமிச்சைவாசகர் பகுதி

* எலுமிச்சம் பழ விதைகளையும்  உப்பும் கலந்து அரைத்து குடித்து விட்டால் தேள் கடி விஷம் இறங்கிவிடும்.
* எலுமிச்சம் பழத்தோலை நன்றாக வெயிலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீரில் கலந்து தெளித்தால்,  ஈக்கள் எறும்புகள் போயே போச்சு!

* பற்கள் முத்து போல பளிச்சிட எலுமிச்சை சாற்றில் உப்பு கலந்து தேய்த்து வந்தால் மஞ்சள் கறை நீங்கி வெண்மையாகும். ஈறுகளில் ரத்தம்  வந்தால் எலுமிச்சை சாற்றில் தண்ணீர் கலந்து கொப்பளித்து வந்தால் உடனே பலன் தெரியும்.
* ஒரு டம்ளர் தண்ணீரில், ½ டம்ளர் பன்னீரும், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறும் கலந்து அதிகாலை எழுந்த உடன் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண்,  ஈறுகளில் வீக்கம் குணமாகும். வாய் துர்நாற்றம் நீங்கும்.
* எலுமிச்சை சாற்றில் வெந்நீர் கலந்து குடித்து வந்தால் தொண்டை எரிச்சல், தொண்டை அடைப்பு, கரகரப்பு, கமறல் நீங்கும்.
* காதுகளில் அழுக்கு படிந்திருந்தால் எலுமிச்சை சாற்றில் 1/8 பங்கு கிளிசரின் கலந்து காதுகளில் தினம் 2 முறை போட அழுக்கு வெளிவரும்.
* தலைச்சுற்றல், மயக்கம், பித்த கிறுகிறுப்புகளுக்கு எலுமிச்சை சாற்றில் தண்ணீர், தேன், இஞ்சிச் சாறு கலந்து, குடிக்கலாம்.
* பெரிய நெல்லிக்காயுடன் எலுமிச்சை சாறு கலந்து அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து குளித்து வந்தால் முடி கொட்டுவது  நின்று கருமை நிறம் கொடுக்கும். பொடுகு, அரிப்பு நீங்கும். சைனஸ் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
* ஆலமரத்தின் நுனி துளிர் விழுதுகளுடன் எலுமிச்சை சாறு கலந்து அரைத்து குளித்து வந்தால் முடி கொட்டுவது நீங்கும்.
* வெள்ளை பூண்டை எலுமிச்சை சாறுடன் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், ஈறு, பொடுகு, அரிப்பு அடியோடு போய்  விடும்.
* உணவு உண்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாக வெந்நீரில் ஒரு எலுமிச்சம்பழம் பிழிந்து அருந்தி வர அஜீரணம், வயிற்றுப் பொருமல், புளிச்ச  ஏப்பம் உடனே சரியாகும்.
* வேப்பிலை, மஞ்சளுடன் எலுமிச்சை சாறு கலந்து அரைத்து உடம்பில் தேய்த்து குளித்தால் அரிப்பு, தேமல், நமைச்சல் நிற்கும்.
- எஸ்.ஜெயலட்சுமி, சென்னை.