2019 நியூ இயர் கொண்டாட்டம்



வாசகர் பகுதி

* பிலிப்பைன்ஸ் நாட்டில் வட்ட வட்டமாக பிரிண்ட் செய்த உடைகள் அணிந்து உருண்டையான பழம் மற்றும் தின்பண்டங்களை சாப்பிடுவது அதிர்ஷ்டம் தரும் என நம்புகிறார்கள்.

* ஸ்பெயின் மேட்ரிட் நகரில் புது வருடத்தை வரவேற்கும் விதமே புதுமையாக இருக்கும். நகரின் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கடிகாரக்கூண்டின்முன் மக்கள் கூடுகிறார்கள். சரியாக 12 மணிக்கு 12 செகண்டுகள் 12 தடவை மணி அடிக்கும்போது 12 திராட்சை பழங்களை சாப்பிடுவர்.

* பிரேசில் நாட்டில் வெள்ளை டிராயரை அணிந்து புது ஆண்டில் அமைதியும், வாழ்வில் முன்னேற்றமும் ஏற்படும் என கருதி வெள்ளை உடையிலேயே இருப்பர்.

* டென்மார்க்கில் பீங்கான் பாத்திரங்களை உடைத்து வீடுகளில் போட்டு வைத்தால், அது அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவதாக நம்புகிறார்கள். யார் வீட்டில் அதிகமாக உடைத்த பீங்கான் குவியல் இருக்கிறதோ அவர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகமாம்.
* நார்வே மக்கள் அன்று அரிசியில் பல பண்டங்களைச் செய்து அத்துடன் கீர் செய்து பாதாம்பருப்பை உபயோகித்துச் செய்கின்றனர். சாப்பிடும்போது யாருக்கு பாதாம் வருகிறதோ அந்த வருடம் முழுவதும் அவர்களுக்குச் செல்வம் தேடி வரும் என நம்பிக்கை.
* மெக்சிகோவில் டிசம்பர் 31-ம் தேதி இரவில், தங்கள் மூதாதையரின் ஆவியை வரவழைத்து அவர்களிடம் அறிவுரை கேட்கிறார்கள்.
* இத்தாலியில் அன்று இரவு சிகப்பு டிராயர் அணிந்து வீதிகளில் வலம் வருகின்றனர். இதேபோல் இரவு 12 மணிக்கு வலம் வந்து நின்றால் அடுத்த 12 மாதங்களுக்கு வாழ்க்கை இனிமையாகவும் சிறப்பாகவும் இருக்குமென நம்புகின்றனர்.
* தென் அமெரிக்காவைச் சேர்ந்த சில பகுதிகளில், மக்கள் தங்கள் வலதுகாலில் நின்றுகொண்டு புது வருடத்தை வரவேற்கிறார்கள்.
* ஸ்லோவாக் பாரம்பரியத்தின்படி மேஜை விரிப்புக்கு அடியில் பணத்தையோ, மீன் செதில்களையோ வைப்பது பழக்கம். துரதிர்ஷ்டம் வராமல் தடுக்கவும் வளம் பெருகுவதை உறுதிப்படுத்துவதாகவும் இப்படி செய்கின்றனர்.

- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.