ப்ரியங்களுடன்டைப்பாற்றலை பெருக்கும் பச்சையம்மன் ஆலயம் பற்றிய கட்டுரைக் கண்டேன். படிக்க படிக்க பக்தி பரசவம் தான் ஏற்பட்டது. படிக்க படிக்க வேம்பின் வாசம் மூக்கை துளைத்தன.
- வண்ணை கணேசன், சென்னை.

எம்.எஸ். அம்மாவின் கூண்டில் அடைபட்ட இசைக்குயில் கட்டுரை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இவருக்கு ஈடு இவர்தான். சில இடங்களில் கண்ணீரை வரவழைத்தாலும் எம்.எஸ். என்றாலே மனம் சந்தோஷப்படத்தான் செய்கிறது.
- ராஜி குருசாமி, ஆதம்பாக்கம்.

சந்தியாவின் பயோடேட்டா முதலிலிருந்து முடிவு வரை எந்த பாசாங்கு மின்றி தெளிவாக பிரதிபலித்திருப்பது என்னை பெரிதும் ஈர்த்தது.
- ஆர்.கே. லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

ஃபுட் ஸ்டைலிங் சீக்ரெட்ஸ் படித்ததும் நாவில் நீர் வர வைக்கும் ரெசிப்பிகளின போட்டோக்கள் மட்டும் எப்படி மேக்கப் செய்யப்படுகிறது என்ற தகவல் புதிதாய் இருந்தது. மின்னுவது எல்லாம் பொன்னல்ல என்பதும் புரிந்தது !
- வரலட்சுமி முத்துசாமி, கொளத்தூர்.

உணவுக்கு முன் பின் என்ன செய்யலாம் என்ற தலைப்பில் உணவு ஆலோசகர் சங்கீதா வழங்கியிருந்த உணவு உட்கொள்ளும் முறை குறித்த ஆலோசனைகள் யாவும் அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது.
- வி.கலைச்செல்வி, தோட்டக்குறிச்சி.

இந்திய செப் 13 வருடமாக மிசிலென் ஸ்டாராக மின்னும் ஆல்பிரட் பிரசாத்தின் ருசியான சமையல் பக்குவம் மற்றும் ஆரோக்கியமான உணவுகள் மேலும் சிறப்பு சேர்த்தது, ரசித்து ருசித்து சுவைத்தோம்.
- மயிலை கோபி, திருவாரூர்.

ஆப் (APP) பிலும் சமைக்கலாம்... சமையலை சுலபமாக்க சுவையாக்க எளிதாக நல்லதோர் வழிகாட்டியாக அனைவருக்கும் பலனும் பயனும் தந்தது.
- கவிதா சரவணன், திருச்சி.

டப்பிங் கலைஞர் ரவீனாரவி கட்டுரையைக் கண்டேன். குரலை அப்படியே இமிடேட் செய்தா அது மிமிக்கிரி. டப்பிங் பேசுவது அவ்வளவு சுலபம் கிடையாது என்று விவரித்தது அருமை!
- கணேசன், சென்னை.

கேக் மற்றும் குக்கீஸ் வகைகள் படிக்கும் போதே இனிக்குது. செய்து  பார்க்கத் தூண்டியது. குட்டீஸ்க்கும் நல்ல விருந்து.
- மா. திவ்யா, திருச்சி.