பொங்கலோ பொங்கல்சுவையான ஆரோக்கியமான பொங்கல்

* சத்தான சிவப்பு அரிசி பொங்கல்


தேவையானவை :

சிவப்பு அரிசி   - ஒரு கப்
பாசிப்பருப்பு    - கால் கப்
மிளகு         - 1 ஸ்பூன்
சீரகம்        - 1 ஸ்பூன்
முந்திரி  - சிறிதளவு
நறுக்கிய இஞ்சி  - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை    - சிறிதளவு
எண்ணெய்   - 1 ஸ்பூன்
நெய்      - 1 ஸ்பூன்
உப்பு     - தேவையான அளவு.

செய்முறை :

பாசிப்பருப்பை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவிடவும்.குக்கரில் அரிசி, பாசிப்பருப்பு, 3 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து 4 விசில் இறக்கவும். பின் கடாயில் எண்ணெய், நெய் விட்டு சூடாக்கி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, முந்திரி தாளித்து, அரிசி மற்றும் பருப்பு கலவையில் சேர்த்துக் கிளறினால், சிவப்பு அரிசி பொங்கல் தயார்.

* வரகு பொங்கல்

தேவையானவை :

வரகரிசி - 1 கப்
பயத்தம் பருப்பு - அரை கப்
தண்ணீர் - 5 கப்
உப்பு - தேவையான அளவு
நெய் - 3 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
முந்திரி - 8
சீரகம் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை

வரகரிசி, பருப்பு இரண்டையும் கழுவி 5 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை விட்டு அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும். பின்பு கடாயில் நெய்யும் எண்ணெயும் சேர்த்து சூடாக்கி, மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை போட்டு தாளித்து பொங்கலை சேர்த்து நன்றாக மசித்து உப்பு சேர்த்து கிளறவும். சாம்பார், தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

* கோதுமை ரவை பொங்கல்


தேவையானவை :

சம்பா கோதுமை ரவை - 1/2 கிலோ
நெய் - 3 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கடுகு - 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 1
தேங்காய்ப்பால் - 3 டம்ளர்
கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை :

வெங்காயம், மிளகாயை நறுக்கி கொள்ளவும். தேங்காய்ப்பால் எடுத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து வெங்காயம், மிளகாயை போட்டு வதக்கி தேங்காய்ப்பாலை சேர்த்து உடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதில் ரவையை கொட்டி கிளறி அடுப்பை சிம்மில் வைத்து வேக வைக்கவும். ரவை வெந்து கெட்டியானவுடன் நெய் விட்டு கிளறி இறக்கவும்.

- கவிதா சரவணன், திருச்சி.