வைரல் சம்பவம்



வெளியாகிய ஒரு மணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பகிர்வுகளையும் அள்ளிய வீடியோ இது. இத்தனைக்கும் இது ஒன்றும் பிரபலத்தின் வீடியோ அல்ல. ஸ்ரேயா கோஷல் பாடிய ஒரு இந்திப் பாடலுக்கு அஞ்சலி என்ற 11 வயது சிறுமி ஆடிய நடன வீடியோதான் அது.
அஞ்சலி நம்மைப் போல ஆரோக்கிய மானவள் அல்ல. புற்றுநோயின் பாதிப்பால் ஒரு காலை இழந்தவள். கொல்கத்தாவில் நடந்த மருத்துவம் சார்ந்த நிகழ்வில் அவள் ஆடிய நடனம் பலருக்கும் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.