போர்னியோ தீவு



உலகின் மிகப்பெரிய மூன்றாவது தீவு மற்றும் ஆசியாவிலேயே மிகப்பெரிய தீவு போர்னியோ. 2,87,000 சதுர மைல்கள் விரிந்திருக்கும் இந்தத் தீவில் சுமார் 2 கோடிப்பேர் வசிக்கின்றனர்.
இந்தோனேஷியா, மலேசியா, புரூணே ஆகிய மூன்று நாடுகளில் பரவியிருக்கிறது போர்னியோ. பழமையான மழைக்காடுகளின் இருப்பிடமாக விளங்குகிறது இந்தத் தீவு.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தோனேஷியன் அதிபர் ஜோகோ விடோடோ தலைநகரை ஜகார்த்தாவிலிருந்து இன்னொரு நகரத்துக்கு மாற்றப்போவதாக அறிவித்திருந்தார். பெயர் வெளியிடப்படாத அந்த நகரம் போர்னியோவில்தான் உள்ளது.