சீப் அண்ட் பெஸ்ட் போன்



இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையைத் தன்வசப் படுத்த சீன நிறுவனங்கள் கடுமையாக போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் ‘சாம்சங்’, ‘ஆப்பிள்’ போன்ற நிறுவனங்களின் குறியாகவும் இந்தியாவே இருக்கிறது.
குறிப்பாக சீனாவின் ‘ஷியோமி’ நிறுவனம் இதில் முழுமூச்சாக இந்தியாவில் இறங்கிவிளை யாடிக்கொண்டிருக் கிறது. மலிவான விலையிலிருந்து அதிக விலை வரை அனைத்து வகையான நவீன வசதிகளும் கொண்ட ஸ்மார்ட்போன் களை இந்தியச்  சந்தையில் இறக்கியுள்ளது  ‘ஷியோமி’.

சமீபத்தில் சீப் அண்ட் பெஸ்ட் விலையில் ‘ரெட்மி 8’ என்ற மாடலை களமிறக்கி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் புது மாடலில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம். மெகா சைஸில், 720X1520 பிக்ஸல் ரெசல்யூசனில், 6.22 இன்ச்சில் டிஸ்பிளே நம்மை கவர்ந்திழுக்கிறது.

12 எம்பியில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய மெயின் கேமரா, 2 எம்பியில் டெப்த் சென்சார் பொருத்தப்பட்ட இன்னொரு கேமரா என்று இரண்டு பின்புற கேமராக்கள், செல்ஃபிக்குத் தனியாக 8 எம்பியில் ஒரு கேமரா, 3 ஜிபி மற்றும் 4 ஜிபி என இரண்டுவிதமான ரேம்கள், நீண்ட நேரம் சார்ஜ் நிற்கவும், விரைவில் சார்ஜ் ஆகவும் 5000mAh திறன் கொண்ட பேட்டரி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபியில் இன்பில்ட் மெமரி, வேண்டுமென்றால் 512 ஜிபி வரை மெமரியை நீட்டித்துக்கொள்ளும் வசதி, குறைவான எடையில் மெலிதான வடிவமைப்பு என அசத்துகிறது இந்த போன். விலை ரூ.7,999.