வைரல் சம்பவம்மென்பொருள் பொறியாளர் ஒருவர் பெங்களூருவிலிருந்து  புனேவிற்கு வந்திருக்கிறார். எரவாடா என்கிற இடத்தில் அவரது அலுவலகம் உள்ளது. கட்ராஜ் என்ற இடத்தில் அதிகாலை 5 மணிக்கு இறங்கியிருக்கிறார். எரவாடா போக டாக்ஸிக்குக் கால் பண்ண, எதுவும் கிடைக்கவில்லை. அப்போது அந்த வழியாக ஆட்டோ வந்திருக்கிறது.

மீட்டர் கட்டணம் என்று டிரைவர் சொல்லியிருக்கிறார். அதற்கு சம்மதம் தெரிவித்த பொறியாளர் ஆட்டோவில் ஏறிவிட்டார். கட்ராஜுக்கும் எரவாடாவுக்கும் 15 கிலோமீட்டர் தூரம். எரவாடாவில் இறங்கிய பொறியாளருக்கு பெரிய அதிர்ச்சி.

ஆம்; மீட்டரில் 4,300 ரூபாய் காட்டியிருக்கிறது. பணத்தைக் கொடுக்காமல் பொறியாளரை நகரவிடவில்லை டிரைவர். வேறு வழியில்லாமல் பணத்தைக் கொடுத்த பொறியாளர், எரவாடா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்துவிட்டார். இந்தச்  செய்தி வேகமாக வைரலாகி வருகிறது.