ஐந்து கேமரா போன்



இன்று ஸ்மார்ட்போனின் தரம் முக்கியம் என் றாலும், இன்னொரு பக்கம் அதன் விலையைத்தான் அதிகமாக மக்கள் கவனிக்கிறார்கள். காரணம், கடந்த வருடம் 50 ஆயிரத்துக்கு விலைபோன ஸ்மார்ட்போன், இந்த வருடம் 30 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக  வந்துவிடுகிறது.

அதனால் விலை மலிவான, அதே நேரத்தில் தரமான போன்களுக்குத்தான் இங்கே மவுசு. இந்நிலையில் இருபதாயிரம், முப்பதாயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போனில் இருக்கும் அனைத்து வகை யான நவீன டெக் னாலஜிகளும் கொண்ட போன்  ஒன்பதாயிரம் ரூபாய்க்குக் கிடைத்தால் எப்படியிருக்கும்? அப்படியிருக்கிறது ‘ரியல்மி 5’. பத்தாயிரம் ரூபாய்க்குள் குவாட்- கேமரா செட் அப்பில் வரிசையாக நான்கு பின்புற கேமராக்களைக் கொண்ட முதல் போன் இதுவே. ஆம்; இதன் விலை ரூ.8,999 மட்டுமே.

மெகா சைஸில், அதாவது 6.5 இன்ச்சில் ஃபுல் ஸ்க்ரீன் டிஸ்பிளே, ஒரு நாள் முழுக்க போனில் விளையாடினாலும் பேட்டரி நிற்க 5000mAh திறன், 12 எம்பியில் பிரதான பின்புற கேமரா, 8 எம்பியில் அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ் பொருத்தப்பட்ட கேமரா, 2 எம்பியில் மேக்ரோ லென்ஸ் கேமரா மற்றும் இன்னொரு 2 எம்பியில் டெப்த் சென்சாருடன் கூடிய கேமரா என்று கெத்து காட்டுகின்றன பின்புற கேமராக்கள், 13 எம்பியில் செல்ஃபி கேமரா வேறு. அத்துடன் 4k வீடியோ ரெக் கார்டிங் வசதி, 198 கிராம் எடை, 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம்,  32 ஜிபி முதல் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் வசதி என அசத்துகிறது இந்த மாடல்.