கேமன் தீவுகள்



கரீபியன் கடலில் சொகுசாக வீற்றிருக்கிறது கேமன் தீவுகள். கிராண்ட் கேமன், கேமன் ப்ராக், லிட்டில் கேமன் என மூன்று தீவுகள் உள்ளன. 264 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் இங்கே சுமார் 64 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
ஸ்கூபா டைவிங்கிற்கும் அழகழகான கடற்கரைக்கும் பேர் போன இந்தத் தீவுக்கூட்டத்தைச் சுற்றிப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். அரசு நேரடியாக எந்த வரியையும் மக்கள் மீது விதிப்பதில்லை. மறைமுக வரிமுறையைத்தான் பின்பற்றுகிறது. பணக்காரர்கள் வசிப்பதற்கு தேர்ந்தெடுக்கும் ஓர் இடமாகவும் உள்ளது கேமன்.