மெகா ஏர்போர்ட்உலகின் மிகப்பெரிய சிங்கிள்- டெர்மினல் ஏர்போர்ட் இது. கடந்த வாரம் பெய்ஜிங்கில் திறக்கப்பட்ட இந்த விமான நிலையத்தின் பரப் பளவு 1.1 கோடி சதுர அடிகள். நட்சத்திர வடிவிலான இதன் வடிவமைப்பு பலரையும் கவர்ந்துள்ளது.
வருடத்துக்கு சுமார் 7 கோடி பயணிகள் இங்கே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈராக்-பிரிட்டிஷைச் சேர்ந்த சாஹா ஹாதித் என்ற கட்டடக் கலைஞர் இதை வடிவமைத்திருக்கிறார். 17 பில்லியன் டாலர் செலவாகியிருக்கிறது.