ராட்சத மீன்கடலில் உள்ள உயிரினங்களை ஆராய்வது டேவ் எட்வர்ட்ஸின் முக்கிய பணி. கடந்த வாரம் அயர்லாந்தில் உள்ள கடலில் அவரது தூண்டிலில் டுனா மீன் ஒன்று மாட்டியது. 8.5 அடி நீளமுள்ள இந்த மீனின் எடை 270 கிலோ. சமீபத்திய நாட்களில் அயர்லாந்தில் பிடிபட்ட ராட்சத மீன் இதுதான். இந்த மீனுக்கு ஜப்பானில் கடும் கிராக்கி.

அங்கே  இதன் மதிப்பு 23 கோடி ரூபாய். ஆனால், டேவ் இந்த மீனை வீட்டுக்குக் கொண்டு விற்பனை செய்யாமல் அப்படியே கடலில் விட்டுவிட்டார். மனிதாபிமானம் மிகுந்த இந்தச் செயலை அவரு டன் வந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் தட்டிவிட, டேவிற்கு வாழ்த்துகள் குவிகின்றன.