அறிவியல் புத்தகங்கள் 2018



Enlightenment Now - Steven Pinker  
உலகம் அழியும் என்ற பயத் திலும் நமது அறிவு வளர்ச்சி அபாரமானது. உலகநாடுகளில் பல்வேறு வேறுபாடுகளைக் கடந்து உலகம் பெரும் அறிவை பல்வேறு நிகழ்வுகளிலிருந்து பெற்றுள்ளது. அந்நிகழ்வுகளை, அனுபவங்களை ஆராய்ந்திருக்கிறார் ஸ்டீவன் பிங்கர்.
 
Lost in Math by Sabine Hossenfelder  
இயற்பியலில் ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்பு களில் அடைந்துள்ள தேக்கநிலையையும் அதற்கான தீர்வுகளைப் பற்றியும்  எழுத்தாளர் சபைன் விளக்கி எழுதியுள்ளார். இயற்பியலாளர்கள் தங்களது பாதையை புதுப்பிக்க வாசிக்கவேண்டிய நூல் இது.
 
This Idea Is Brilliant by John Brockman  
இன்று உலகில் நாம் பயன்படுத்தும் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையான ஐடியா இருக்கும் அல்லவா? அதைப்பற்றி தீர்க்கமாக விவரிக்கும் நூல் இது. விண்வெளி முதல் தினசரி வாழ்க்கை வரை சுவாரசியமாக விளக்குகிறது.
 
The Rise and Fall of the Dinosaurs by Steve Brusatte  
66 மில்லியன் ஆண்டுகளுக்கு (6 கோடியே அறுபது லட்சம் ஆண்டுகள்) முன்பு வாழ்ந்த டைனோசர்கள் எப்படி அழிந்தன என்று விளக்குகிறது இந்நூல்.