மொழி தியரிகள்!



The Bow-Wow Theory  
இயற்கை ஒலிகளை கவனித்து மனிதர்கள் மொழிகளை கற்றார்கள் என்பது போ வோ தியரியின் சாராம்சம். மூ, மியாவ், ஸ்ப்ளாஷ், குக்கூ, பேங் ஆகிய வார்த்தைகளை(onomatopoeic) நம் முன்னோர்கள் பேசியதாக கூறுகின்றனர். ஆனால் சீன, அர்ஜென்டின மொழிகள் பலவற்றிலும் இவை மாறுபடுவதால் இத்தியரியை பலரும் ஏற்கவில்லை.  
 
The Ding-Dong Theory  
பிளேட்டோ, பிதாகரஸ் ஆதரித்த கொள்கை. இயற்கையான சூழல்களிலிருந்து மொழி யைக் கற்றுக்கொண்டோம் என்கிறது டிங் டாங் தியரி. ஆனால் ஒலி, அர்த்தம் ஆகியவற்றின் உறுதித் தன்மைக்கு எந்த ஆதாரமும் கிடையாது.  
 
The La-La Theory  
டேனிஷ் மொழியியலாளர் ஓட்டோ ஜெஸ்பர்சன் பாடல், அன்பு, விளையாட்டுகளிலிருந்து மொழி தோன்றியது என்று கூறினார். 2005 ஆம் ஆண்டு டேவிட் கிரிஸ்டல் மொழிக்கும் உணர்ச்சிக்கும் இடைவெளி உண்டு என்று சொல்லி இந்தத் தியரியை உடைத்தார்.  
வலி உணர்ச்சிகளை சொல் லும் Pooh-Pooh, புன்னகை, தும்மல் ஆகியற்றை சொல்லும் Yo-He-Do ஆகிய தியரிகளையும் நிரூபிக்க ஆதாரமில்லை.