பிட்ஸ்!



*மைக்ரோவேவ் ஓவனில் முதல்முறையாக சமைக்கப்பட்ட உணவுப்பொருள், பாப்கார்ன்.
 
*நள்ளிரவு முதல் காலை 6 மணிவரை பதினாறு வயதுக்குட்பட்டோர் வீடியோகேம் விளையாடுவதை தென்கொரியா தடைசெய்துள்ளது. இச்சட்டத்திற்கு Shutdown Law என்று பெயர்.
 
*குரங்கு முகம் கொண்ட பூக்களுக்கு(orchid) Dracula Simia என்று பெயர்.
 
*இங்கிலாந்தில் 1600 ஆம் ஆண்டில் Whipping Tom என்ற மர்ம மனிதர் மக்களை பீதியூட்டிவந்தார். தெருவில் தனியாக நடந்து செல்லும் பெண்களை பின்புறத்தில் இரும்புக்கம்பியால் அடித்து வீழ்த்திவிட்டு, ஸ்பாங்கோ என கூக்குரலிட்டு தப்பி ஓடுவது  இவரின் டிரேட்மார்க் பாணி.
 
*கான்டாக்ட் லென்சிற்கான ஐடியாவை 1508 ஆம் ஆண்டு ஓவியரும் கண்டுபிடிப்பாளருமான லியானார்டோ டாவின்சி உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
 
*1814-1830 காலகட்டத்தில் பிரான்சின் கொடி பளிச் வெள்ளையாக இருந்தது.