புத்துயிர் பெறும் பிரபலங்கள்!



அமெரிக்காவின் கலி ஃபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சல்சில் 2010ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் டிஜிட்டல் டொமைன் நிறுவனம், இறந்த பல சினிமா பிரபலங் களை டிஜிட்டல் வடிவில் உருவாக்கி வருகிறது. சினிமா, இசைநிகழ்ச்சிகள் ஆகியவற்றில் இறந்த பிரபலங்களை அச்சு அசலாக உருவாக்கி ஆச்சரியப்படுத்தியது (ட்யூபக் ஷாகுர், கோச்செல்லா).  

“மனிதர்களின் உடலில் உணர்ச்சிகளை சொல்லும் முகம் முக்கியம். அதில் தவறு கள் செய்தால் மக்களுக்குத் தெரியாது; ஆனால் உயிர்த் தன்மை தொலைந்துவிடும்” என்கிறார் டிஜிட்டல்  டொமைன் நிறுவனத்தைச் சேர்ந்த டேரன் ஹெண்ட்லர். எப்படி செய்கிறார்கள்? அதி துல்லிய  ஸ்கேனர் களைக் கொண்டு நடிகர்களின் உடல்களை பிரதி  எடுக்கின்றனர்.

ரத்த ஓட்டத்தினால் தோலின் நிறம் மாறுவதைக் கூட பதிவு செய்யும் ஸ்கேனர், கண்கள், உதடுகள், கன்னம் ஆகியவற்றை துல்லியமாக பதிவு செய்கிறது. இதற்கான செலவு அதிகமென் றாலும் நமக்குப் பிடித்த நட்சத் திரங்களைத் திரையில் காண்ப தோடு அவர்களின் குரலையும் சின்தெசிஸ் முறையில் துலக்கமாகக் கேட்பது மகிழ்ச்சிக்குரியதுதானே!