ஆண்ட்ராய்டு வரலாறு!



ஆண்ட்ராய்டு உலகிலுள்ள 90 சதவிகித ஸ்மார்ட்போன்களை ஆளுமை செய்யத்தொடங்கி 10 ஆண்டுகளாகின்றன. ஐ, ஓஎஸ், சிம்பியன், பிளாக்பெரி என பல்வேறு ஓஎஸ்களை எப்படி ஆண்ட்ராய்டு வென்றது? வெரிஸோன் என்ற நிறுவனமே இதற்கு காரணம்.
2009 ஆம் ஆண்டு ஐபோன் உலகையே மிரட்டிக்கொண்டி ருக்க, ஏடிஅண்ட்டி அதை விநியோகிக்கத்  தொடங்கி யிருந்தது. அதற்கு எதிராக ஐபோனை வெல்ல வெரிஸோன் ஆண்ட்ராய்டை ஆதரிக்கத் தொடங்கியது.  

2007ல் உலகின் முதல் ஸ்மார்ட்போன்  ஓஎஸ்  பில்டப்பில் ஆப்பிள் தன் ஐபோனை களமிறக்கியது. 2008 ஆம் ஆண்டு டி- மொபைல் துணையுடன் ஆண்ட்ராய்டு ஹெச்டிசி ட்ரீம் போன் மூலமாக உலகிற்கு அறிமுகமானது.

2003 ஆம் ஆண்டு டிஜிட்டல் கேமராக்களுக்கான மென்பொருளாக இதனை ஆன்டிரூபின் உருவாக்கினார். 2005  ஆம் ஆண்டு கூகுள் ஆண்ட்ராய்ட் ஓஎஸ்ஸை வாங்கி ஆண்ட்ராய்ட் இன்க் என பெயரிட்டது. பத்து ஆண்டு  மாற்றத்தின் விளைவாக இதோ உங்கள் கைகளில் ஆண்ட்ராய்ட் 9.0 Pie ஓஎஸ் அப்டேட்டாகிஉள்ளது.