வசதியான நகரம் எது?



ஆபீஸ், பிஎஃப், வேலை பாதுகாப்பு என எதுவும் இன்றி காசு தேவையா? ஃப்ரீலான்ஸ் வேலை போதும் என வேலை செய்யும் கலைஞர்களுக்கு செக் நாட்டின் பிராக் நகரம் ஏற்றது என ஸ்வீடனின் ஆம்ஸ்டர்டாம் நகரைச் சேர்ந்த Hoofdkraan.nl இணையதளம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 
117 நகரங்களில் நடந்த ஆய்வில் கடந்தாண்டு முதலிடம் பிடித்த போர்ச்சுக்கலின் லிஸ்பன் 3வது இடத்திற்கு சரிந்துவிட்டது. 2வது இடத்தில் ஸ்பெயினின் செவில்லே உள்ளது. செக் நாட்டு தலைநகரான பிராக், குறைந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை, கிரியேட்டிவ் சுதந்திரம், இணைய
வசதி என அனைத்திலும் முன்னேறி முதலிடம் பிடித்துள்ளது.  

தாய்லாந்தின் சியாங் மை, பேங்காக், பாலி ஆகிய இடங் களைவிட சுத்தம், பாதுகாப்பு, பேச்சு சுதந்திரம், பொதுப்போக்கு வரத்து, தரமான காஃபி, உணவு என அனைத்து விஷயங்களிலும் பிராக் டிஸ்டிங்க்‌ஷன் அடித்துள்ளது.

“உண்மையில் இப்படி வாழமுடியுமா என்பதே ஆச்சரியமாக உள்ளது” என்கிறார் பத்திரிகையாளரான தோர் கார்சியா. 1992 ஆம் ஆண்டு நாளிதழ்வேலைக்காக செக் நாடு சென்று அங்கே திருமணமாகி 1994 ஆம் ஆண்டு செக்கின் பிராக்கில் செட்டிலாகி வாழ்வும் எழுத்துமாக வாழ்ந்து வருகிறார்.