பிட்ஸ்!



*ஜப்பான் கலாசாரத்தில் ஒரு வரிடம் மன்னிப்பு கேட்க 20 விதமான முறைகள் உண்டு.
 
*கனவுகளின் கடவுளான மார்பியஸின் நினைவாக போதைப்பொருளுக்கு மார்பின் என பெயர் வைக்கப்பட்டது.
 
*2000 ஆம் ஆண்டு பின்லாந்தில் மொபைல் போன்களை தூக்கி யெறிவது தனிப் போட்டியாகவே அங்கீகாரம் பெற்றது. தூக்கி எறியும் தூரம், டெக்னிக் பொறுத்து வெற்றியாளர் அறிவிக்கப்படுகிறார்.
 
*நாம் பயன்படுத்தும் கரன்சி தாள்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பாக்டீரியாக்கள் உண்டு.
 
*உணவுக்கு பதிலாக அதிலுள்ள சத்துக்களை உள்ளடக்கிய பொருட்களுக்கு Soylent என்று பெயர்.
 
*பண்டைய ரோம நாகரிகத்தில் Saturnalia என்ற தினம் உண்டு. இத்தினத்தில் அடிமைகள், அவர்களின் முதலாளிகளுக்கு நிகராக மதிக்கப்பட்டு அவர்கள் அணியும் ஆடைகளை அணிவது வழக்கம்.