டெக் வைரல்!



Yooka-Laylee   
பிளேடோனிக் கேம்ஸ் நிறு வனத்தின் தயாரிப்பு, 3 மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்றாலும் காகிதத்திலிருந்த ஐடியா விஷுவலாக சொதப்ப, விளையாட்டு தோற்றுப்போனது. டிசைன், கான்செப்ட், நான்லீனியர் கதை வசீகரித்தாலும், இழுத்தாலும் கேமரா கன்ட்ரோல்
களோடு ஒத்திசைய மறுப்பு, கற்பனை வறட்சியால் விசுவலாக வரவேற்பு பெறாத விளையாட்டு இது.
 
PONOPLAYER  
நீல்யங் என்ற கண்டுபிடிப்பாளரின் ஆடியோபிளேயர். குறைந்த விலையில் அதிநவீன தர ஒலியை மக்களுக்கு தர முயன்றார். ஆனால் ஆடியோ கம்பெனிகள் ப்ரீமியம் ரேட்டிலிருந்து கீழிறங்காததால், தன் போனோபிளேயர் தயாரிப்பை கைவிட்டுவிட்டார். 6 லட்சம்  டாலர் களுக்கு மேல் முதலீடு கிடைத்த திட்டம் இது.
 
The Coolest Cooler  
ஜாலியான பார்ட்டிகளுக்கு போர்ட்டபிள் குளிர்சாதனப்பெட்டி இது. 2014 ஆம் ஆண்டு 13 மில்லியன் டாலர்கள் முதலீடு பெற்றது. மிக்சி, வாட்டர் ப்ரூஃப் ஸ்பீக்கர், பாட்டில் ஓப்பனர் என பல்வேறு வசதிகள் இருந்தாலும் தயாரிப்பும் விநியோகமும் வேகமெடுக்கவில்லை.