மருந்துகளுக்கு தடை!



Moxicillin+Dicloxacillin
ஆன்டிபயாடிக்  மருந்துகளாக இவையிரண்டும் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு பின்விளைவுகளைத் தர இந்திய அரசு தடைசெய்துள்ளது. அமாக்ஸிசிலின்- டைகிளாக்சாசிலின்- லேக்டோபேசில்லஸ் கலந்த மருந்துகளுக்கு அரசு தடை விதிக்கவில்லை.
 
Nimesulide+ Paracetamol
பனிரெண்டு வயதுக்குக் கீழுள்ள சிறுவர்களுக்கு இந்த ஊசி மருந்தை பயன்படுத்த அரசு தடைவிதித்துள்ளது. இம்மருந்து கல்லீரலை பாதிக்கும் பக்கவிளைவு கொண்டது.
 
Clobetasol propionate + Ofloxain + Ornidazole +Terbinafine  
பூஞ்சை, பாக்டீரியாக்களுக்கு எதிரான மருந்து. ஆனால் அதிக ஆற்றல் வாய்ந்த ஸ்டெராய்டாக செயல்படுவதால் பின்விளைவுகளின் வேகம் அதிகம்.
 
Cefuroxime + Linezolid
காசநோய்க்கு ஆன்டிபயாடிக்காக மிக அரிதாக அளிக்கப்படு வது லைன்ஸோலிட். கடுமையான பாக்டீரியா தொற்றுகளுக்கு மருத்துவரின் பரிந்துரையை ஒட்டி வழங்கப்படும் மருந்து. சிறுநீரகத்தில் ஏற்படும் பாக்டீரியத் தொற்றுக்கு செஃப்யூரோசைம் பயன்படுகிறது.
 
Azithromycin + Levofloxacin
அஸித்ரோமைசின் (Zithromax, Azithrocin) வயிற்றுப்போக்கு, தொண்டைவலி, நிமோனியா என பல்வேறு பாக்டீரியா தொற்றுகளை சரியாக்க உதவுகிறது. இரைப்பை அழற்சி, நிமோனியா பிரச்னைகளுக்கு லெவோஃப்ளோஸாசின் உதவுகிறது.