எதிர்காலம் தலைவனின் கையில்!



ஸ்டார்ட் அப் மந்திரம்

அனைவரும் கம்ப்யூட்டர் விற்றுக்கொண்டிருந்தபோதே, இசை மீதான காதலில் எடை குறைவான ஐபாடைக் கண்டுபிடித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். இறுதியில் அவர் உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்தில் அவரை வெளியேற்றியபோதும் நெக்ஸ்ட் என்ற நிறுவனத்தை நடத்தியதோடு ஐபோன் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் இருந்தார். பின் மீண்டும் நிறுவனத்திற்கு வந்து சரிந்து கிடந்த ஆப்பிளை உயர்த்தினார்.  

இதில் நீங்கள் கவனிக்கவேண்டியது, கணினி கம்பெனியான ஆப்பிள் காலத்திற்கேற்ப எலக்ட்ரானிக் பொருட்களை தயாரிக்க தயங்கவில்லை. விண்டோஸைத் தாண்டி இன்று ஆப்பிள் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமாக நிலைத்திருக்க ஸ்டீவ் ஜாப்ஸின் லேட்டரல் சிந்தனையும் காரணம்.  2016 ஆம் ஆண்டு ஓலா,பேடிஎம், குயிக்கர் ஆகிய ஸ்டார்ட்அப்கள் 1 பில்லியன் கிளப்பில் வலதுகால் வைத்து நுழைந்தன.

இதில் மெசேஜ் சேவையளித்த ஹைக், கல்வி சேவைக்கான பைஜூ ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஐடியா சூப்பர் என்றாலும் நிதி திரட்டுவதில் இன்னும் வேகம் போதவில்லை. முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களைப் பார்ப்போம்.
 
பிக் பாஸ்கெட்  

2011 ஆம் ஆண்டில் தொடங்கி சூப்பர்மார்க்கெட் குரோசரி சப்ளைஸ் பி.லிட் நடத்தும் ஸ்டார்ட்அப் நிறுவன வெற்றியைக் கவனித்த அமேஸான், ஃபிளிப்கார்ட்டும் ஆன்லைனில் காய்கறி விற்பனையை தொடங்கவிருக்கின்றன. அலிபாபாவிடம் 200 மில்லியன் முதலீட்டை தொடங்கிய 6 ஆண்டுகளில் பெற்றுவிட்ட இந்நிறுவனத்திற்கு 30 நகரங்களில் சேவை உண்டு. மதிப்பு 850 மில்லியன் டாலர்கள்.
 
பாலிசி பஜார்  

ஈடெக்ஆசஸ்(etechaces) மார்க்கெட்டிங் அண்ட் கன்சல்ட்டிங் பி.லிட் நிறுவனம் இந்தியாவின் நம்பர் 1 இணைய காப்பீடு நிறுவனம். சாஃப்ட்பேங்க் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டு லாபம் பார்த்த இணைய ஸ்டார்ட்அப்களில் பாலிசி
பஜார் முக்கியமான ஒன்று.
 
புக்மைஷோ  

2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 500 மில்லியன் டாலர்கள். நெட்வொர்க் 18 உள்ளிட்ட நிறுவனங்கள் டிக்கெட் புக்கிங் நிறுவனமான புக்மைஷோ மீது முதலீடு செய்துள்ளன.

(உச்சரிப்போம்)

கா.சி.வின்சென்ட்