Mini முத்தாரம்



மார்ட்டின் லூதர்கிங்கின் 50ம் ஆண்டு நினைவு தினத்தை மெம்பிஸ் சென்று படம்பிடித்திருக்கிறீர்கள். இன்றைய ஊடகச்சூழலில் கிங் அலை மீண்டும் எழ வாய்ப்புள்ளதா?  

இன்று பல்வேறு நிறுவனங்களும் ஊடகங்களை கட்டுப்படுத்துகின்றன. கிங்கின் நினைவு தினத்தை பதிவு செய்வது அத் தினத்திற்கான மரியாதையை தொடரச்செய்யும் என்று நம்புகிறேன்.
 
அதிபருடன் செய்த நேர்காணலில் ஜேம்ஸ் காமேயை பதவி நீக்கும் விஷயத்தை பேசவைத் தீர்கள். எப்படி ஸ்கூப் செய்திகளைக் கண்டு பிடிக்கிறீர்கள்? 

நேர் காணல் களை வெளிப் படையாகச் செய்வது முக்கியம். பல்வேறு கேள்விகளை மனதில் வைத்துள்ள நேயர்களின் பிரதிநிதியாக நான் செயல்படவேண்டிய பொறுப்பை உணர்ந்துள்ளேன். பதில்களைத் தரவில்லையென்றால் மீண்டும் மீண்டும் கேள்விகளைக் கேட்பதே என் வேலை.
 
கிங் நினைவுதினத்தை கருப்பின செய்தித்தொகுப்பாளரான நீங்கள் தொகுத்து வழங்கியுள்ள அனுபவம் எப்படியிருந்தது?
 
ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் நிலை உயர பலரின் தியாகம் காரணம். நான் இந்நிலைக்கு பலரின் தோள்களின் மீது ஏறியே வந்துள்ளேன்  என்பதை நினைவு படுத்திக் கொள்கிறேன். இன்று பல்வேறு நிறங்களைக் கொண்ட குழந்தைகள் என்னை டிவி வழியாகப் பார்க்கிறார்கள். இது வட்டமாக சுழன்றுவரும் நிகழ்வு.

- லெஸ்டர் ஹோல்ட், என்பிசி தொகுப்பாளர்.