சென்னை சீக்ரெட்ஸ்



தேவாலயக் குடும்பம்!

சாந்தோமில் ‘மத்ரா’ என்ற போர்த்துகீசிய குடும்பம் வசித்துள்ளது. தேவாலயத்தை கட்டி வழிபடும் செல்வச் செழிப்பு கொண்ட  குடும்பம் இது. அன்று இக்குடும்பத்தின் பெயரிலேயே அக்கிராமமும் அழைக்கப் பட்டுள்ளது.

இதிலிருந்து, ‘மதராஸ்’  என்கிற  சொல்   வந்திருக்கலாம் என்கின்றனர். இதற்கு ஆதாரமாக 1927ம் ஆண்டு மேனுவல்  மத்ரா மற்றும்  அவரின்  தாயாரின் கல்லறையை,  சாந்தோமில்  புனித  லாசரஸ்  தேவாலயத்தைக்  கட்டும்போது கண்டுபிடித்துள்ளனர்.

அதில், 1637 இல் இங்கு கோயில் கட்டிய மத்ரா மற்றும் அவர் குடும்பத்தை கௌரவிக்கும் வசனங்கள் இருந்தன. எப்படியோ, சென்னையும் மெட்ராஸும் மக்களின்   மனங்களிலிருந்து  பிரிக்க முடியாத பெயர்களாகிவிட்டன. இவ்விரு கிராமங்களுடன் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களும் ஒன்றிணைந்ததே சுமார் 80 லட்சம் மக்கள் வாழும் இன்றைய சென்னை பெருநகரம்!

பிகே