அகதிகளின் நாயகன்!



மியான்மரிலிருந்து இடம் பெயர்ந்த ரோஹிங்கயா முஸ்லீம்களுக்கு மலேசியா புகலிடம் அளித்துள்ளது. பலர்  கோலாலம்பூருக்கு  சட்டவிரோதமாக  கடத்தப்படும் சூழலில் அவர்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறார் முகமது நூர்.

சவுதி அரேபியாவை பூர்வீகமாகக் கொண்ட நூர், தகவல்தொழில்நுட்ப வல்லு நராகப்  பணியாற்றியவர். தற் போது ரோஹிங்கயா விஷன் (2010) என்ற பெயரில் செய்தி நிறுவனத்தை தொடங்கி அரபி, ஆங்கிலம் மொழிகளில் செய்திகளை வெளியிட்டு முஸ்லீம்   மக்களை  ஒன்றிணைத்து  பிரச்னைகளைக்களைய முயற்சித்து வருகிறார்.

பிளாக்செயின் முறையில் ரோஹிங்கயா மக்கள் பணத் தைப் பரிமாறிக்கொள்ளும் நிறுவனத்தை நூர் தொடங்கியுள்ளார். தற்போது இந்நிறுவனத்தில் 3 லட்சம் ரோஹிங்கயா மக்கள் இணைந்துள்ளனர். “தாய்மண்ணை இழந்தவர்கள் சந்தித்துக்கொள்ளும் ஜங்க்‌ஷன் இது” என்கிறார் நூர்.

மலேசியா, முஸ்லீம் நாடு என்றாலும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மிகக் குறைந்த வாய்ப்புகளே அகதிகளுக்கு உண்டு.” சுயலாபங்களுக்காக  டிவியில் ரோஹிங்கயாக்களைப் பற்றிப்பேசும் பிரதமர் பற்றி கருத்து கூற ஏதுமில்லை. ரோஹிங்கயா மக்களுக்கு தம்மைக் காப்பதே  பிரச்னையாக  உள்ளது” என்கிறார் முகமது நூர்.