மொபைலில் ஆன்மிக விளையாட்டு!



ஸ்டார்ட் அப் மந்திரம் 3

இணைய விளையாட்டுத்துறையில் ராஜ்தீப் குப்தா தன் ரூட் மொபைல் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.  இணைய விளையாட்டின் இந்திய உள்நாட்டுச் சந்தை மதிப்பு 80 கோடி. முறைப்படுத்தப்படாத இ-ஸ்போர்ட்ஸ் துறை மதிப்பு 818 மில்லியன் டாலர்கள் (81.8 கோடி)  என கிசுகிசுக்கிறார்கள். உலகளவில் இத்துறையில் இந்தியாவின் இடம் 17.

“இந்தியாவில்  இ-ஸ்போர்ட்ஸ்  துறையின்  வளர்ச்சி 40 சதவிகிதம். இவ்வாண்டில் கேமிங் போட்டிகளை விரைவில் தொடங்கவிருக்கிறோம். முதலீட்டுக்கு சிறந்த துறை இது. முக்கிய நகரங் களில் 4ஜி சேவைகள் வந்துவிட்டதால் கேமிங் வீரர்களும் நிறையப்பேர் உருவாகி
வருகிறார்கள்” என்கிறார் ராஜ்தீப் குப்தா.

ஆன்மிக வாய்ப்பு!  

இனிவரும் காலங்களில் ஏஐ உதவியுடன் ஒருவரின் சமூக கணக்குகளை ஹேக் செய்து ஒருவரின் சிந்தனையை டிசைன் செய்து ஐடியாவையும் திருடி அக்கவுண்ட் கொள்ளாத அளவு காசு சேர்க்கவும் முடியும். பாசிட்டிவ்வாக யோசித்தால் நேர்மையான வழியில் கோடீசுவரராக முடியும். பேவேர்ல்டு மிதுல் தமனியின் ஐடியாவை முதலில் பார்ப்போம்.

மொபைல்கள் மூலம் மக்கள் நிதிச்சேவைகளை எளிதாக செய்ய பேவேர்ல்டு ஸ்டார்ட்அப்பை தொடங்கினார் மிதுல். ரீசார்ஜ் கடை களில் ஒவ்வொரு பயனருக்கும் வெவ்வேறு போன்களை பயன்படுத்தி டாப் அப் செய்துகொண்டிருந்த கடைக்காரரைப் பார்த்ததும் ‘‘ஏன் அனைத்தையும் ஒன்றிலேயே செய்யக்கூடாது? என்று தோன்றியது” என்று பேசும் மிதுல் தன் பேவேர்ல்டு ஸ்டார்ட்அப்பில் 630 நகரங்களைச் சேர்ந்த பத்தாயிரம் விற் பனையாளர்களை இணைத்துள்ளார். 2006 இல் தொடங்கிய ஸ்டார்ட்அப்பை நவீனத்திற்கேற்ப அப்டேட் செய்யும் கட்டாயம் மிதுலுக்கு உள்ளது.

ஆன்மிகத்தில் ஏதாவது தொழில் செய்து சம்பாதிக்க முடியும் என நினைத்திருக் கிறீர்களா?  பலருக்கும்  நம்பிக்கை  இருக்காது. ஆனால் கிரி ட்ரேடிங் கம்பெனி எப்படி சாதித்தது? இந்துமத புத்தகங்கள், பூஜை பொருட்கள் என விற்பனை செய்து இன்று ஆன்லைனிலும் கடைவிரித்துள்ளனர்.

அபித் அலிகானின் ப்ரவ்டு உம்மா(2012), சௌம்யா வர்தனின் சுப்பூஜா(2013), சிவா மற்றும் சேட்டனின் இபூஜா ஆகிய நிறுவனங்களும் இத்துறையில் ஸ்டார்ட்அப்களாக தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவிலுள்ள ஆன்மிக சந்தை மதிப்பு 40 பில்லியன் டாலர்கள். இவ்வாரம் வாசிக்கவேண்டிய நூல் Influence: The Psychology of Persuasion by Robert B.Cialdini  

(உச்சரிப்போம்)

கா.சி.வின்சென்ட்