விளம்பரப் பலகை வாடகை ரூ.15 கோடி!



உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் விளம்பரப் பலகை நியூயார்க் நகரில், ஏற்கனவே பல பெரிய ஒளிரும் விளம்பரப் பலகைகளுக்குப் பெயர் பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் இயங்கத் தொடங்கியிருக்கிறது. ஒரு எட்டு மாடிக் கட்டிடம் அளவுக்கு உயரமான இந்தப் பலகை, கால்பந்து விளையாட்டுக் களம் போன்று அகலமானது.

அதிதுல்லிய திரையுடன் கூடிய இந்த டிஜிட்டல் விளம்பரப் பலகை மூலம் முதன்முதலாக மலை, பறவை, அடுக்குமாடிக் கட்டிடங்கள் போன்றவற்றைக் காட்டும் ஒரு டிஜிட்டல் படம் திரையிடப்பட்டது. இந்தப் படக்காட்சிகளுடன் பின்னணி இசையும் சேர்ந்து ஒலித்ததை நியூயார்க் மக்கள் கண்டுகளித்தனர்.

கூகுள் நிறுவனம் இந்த மாபெரும் டிஜிட்டல் பலகையை முதன்முதலாக வாடகைக்கு எடுத்திருக்கிறதாம். நான்கு வாரங்களுக்கு இந்தப் பலகையை வாடகைக்கு எடுக்க எவ்வளவு கட்டணம் தெரியுமா? சுமார் 25 மில்லியன் டாலர்கள்தான்! இதன் இந்திய ரூபாய் மதிப்பு 15,43,58,000. சுமார் மூன்று லட்சம் பேர் இந்த விளம்பரப் பலகை இருக்கும் இடத்தை தினமும் கடக்கிறார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை நடை பயணிகள் மட்டும். வாகனங்களில் செல்வோர் தனி!

 பா.கபிலன், சிதம்பரம்.