நம்பினால் நம்புங்கள்



பழைய மொபைல் போன்களை சூரிய ஆற்றலில் இயங்கக்கூடிய மைக்ரோபோன்களாக மாற்றி, மரம் வெட்டுபவர்கள் பற்றி தகவல் தெரிவிக்கச் செய்ய முடியும். இம்முறையை அமெரிக்க இயற்பியலாளர் டாபர் ஒயிட் கண்டுபிடித்துள்ளார்.

மனித மூளையின் சிந்தனையை சுற்றுப்புற வாசனை மற்றும் ஒலிகள் மூலம் புரிந்துகொண்டு தகவல் அனுப்பும் மைக்ரோ சிப் கண்டறியப்பட்டுள்ளது.

உலகில் ஆண்டுதோறும், 5.6 ட்ரில்லியன் சிகரெட் துண்டுகள் எறியப்படுகின்றன. இவற்றை ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், எலெக்ட்ரிக் கார், டர்பைன் ஆகியவற்றின் பாகங்களுக்குப் பயன்படுத்துவது பற்றிய விசித்திர ஆராய்ச்சியில் தென் கொரிய விஞ்ஞானிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

6 தலைமுறைகளாக மாற்றம் அடைந்தே, வண்ணத்துப்பூச்சி இறகுகளின் பழுப்பு வண்ணம் பர்பிளாக உருமாறியுள்ளது.

முதன்முதலாக ஒரு வால் நட்சத்திரத்தைச் சுற்றி வருவதற்காக ஒரு விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. ரோஸாட்டா என்ற அந்த விண்கலம் சமீபத்தில் தரையிறங்கியது.

ஊர்வன இனத்தின் பத்தாயிரமாவது வகை சமீபத்தில் அறியப்பட்டுள்ளது. பறவைகள், மீன்களிலும் இதே அளவு வகைகள் உள்ளன.

செம்மறியாடு, வெள்ளாடு கலந்த கலவையாக இனவிருத்தி செய்யப்பட்ட புதுவகை ஆடு அமெரிக்காவின் அரிசோனாவில் பிறந்துள்ளது. இதற்குப் பெயர் பட்டர்ஃபிளை!

ஹாரிபாட்டர் நாவல்களைப் படிக்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம், ‘வேறுநாட்டிலிருந்து குடிபுகுவோர், ஒருபால் ஈர்ப்பு உடையோர் மற்றும் அகதிகள்’ மீதான கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஜனவரியில் இருந்ததை விட, 2014 ஆகஸ்ட்டில் நிலவு 12 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் பிரகாசமாகவும் காணப்படுகிறது.

ஆப்ரிக்கன் நைட் ஆடர் என்ற விஷப் பாம்புக்கு மனிதர்களின் மீது ஏறி, உடைகளுக்குள் புகுந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு!