எலும்புச் சுரங்கம்!



பெருநகரங்களில் மக்கள்தொகை பெருகப் பெருக, கல்லறைகள்கூட பிரச்னையாகிவிடும். அத்தனை பேருக்கும் ஒதுக்க அங்கு இடம் ஏது? பாரீஸ் நகர நிர்வாகம் இதை 18ம் நூற்றாண்டிலேயே உணர்ந்து, தகுந்த ஏற்பாடு செய்துவிட்டது.

‘கேடகோம்ப்’ என்ற பெயரில் தரைக்கு அடியில் சுரங்கம் அமைத்து, இறந்தவர்களின் எலும்புகளைச் சேகரிக்கின்றனர். சுமார் 60 லட்சம் பேரின் எலும்புகள் இருக்கும் இந்த சுரங்கம், பரபரப்பான சுற்றுலாத் தலமாகவும் ஆகிவிட்டது.