சூதாட்டம்...அமெரிக்காவை முந்தும் ஆசியா!



ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் 20 லட்சம் பயணிகள் சூதாட வருகின்றனர். இதன் மூலம் ஆண்டுக்கு 35 மில்லியன் டாலர் வருவாய் கிடைக்கிறது.

சிங்கப்பூருக்கு ஆண்டுதோறும் சூதாடச் செல்வோரின் எண்ணிக்கை ஒரு கோடி. ஆண்டு வருவாய் 4,396 மில்லியன் டாலர்.

தெற்கு சீனக் கடலில் மக்காவ் நகரம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் 2.5 கோடி பயணிகள் சூதாட வருகின்றனர். இதன் மூலம் 34,608 மில்லியன் டாலர் வருவாய் கிடைக்கின்றது. சூதாட்டமே இந்த நகரின் வருவாய். குவான்டுன் மாகாண தலைநகரான குவான்ஜோவிற்கும் மக்காவ் நகரத்திற்கும் ரயில் பாதை, இந்த வருவாயைக் கொண்டே போடப்பட்டது.

இந்தியாவில் கோவா, சிக்கிம் மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான டாமனிலும் மட்டுமே சூதாட்ட விடுதிகள் உள்ளன. டெல்டா கார்பப்ரேஷன் என்ற ஒரே நிறுவனம் இந்தியாவில் நான்கு சூதாட்ட விடுதிகளை நடத்துகிறது. 2012ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் இது ரூ. 27.8 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இது காலாண்டுக்கு காலாண்டு 40 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

2010ல் சூதாட்டம் மூலம் ஆசியாவில் ஆண்டுதோறும் 34.3 பில்லியன் டாலர் வருவாய் கிடைத்தது. இந்த வருவாய் 2015ம் ஆண்டில் 79.266 பில்லியன் டாலராக உயரும். இது 18.3 சதவீத வளர்ச்சி விகிதமாகும்.

அமெரிக்காவில் 2011ல் 59.500 பில்லியன் டாலராக உள்ள சூதாட்ட வருவாய், 2015ல் 73.320 பில்லியன் டாலராக உயரும். இது 5 சதவீத வளர்ச்சியே ஆகும்.

ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் 2011ல் 16.175 பில்லியன் டாலராக உள்ள சூதாட்ட வருவாய் 2015ல் 18.343 பில்லியன் டாலராக உயரும்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் 2011ல் 4.096 பில்லியன் டாலராக உள்ள சூதாட்ட வருவாய் 2015ல் 5.614 பில்லியன் டாலராக உயரும்.

கனடாவில் 2011ல் 5.596 பில்லியன் டாலராக உள்ள சூதாட்ட வருவாய் 2015ல் 6.230 பில்லியன் டாலராக வளரும்.

 க.ரவீந்திரன், ஈரோடு.