நாட்பட்ட முழங்கால் வலி…



அறுவைசிகிச்சை இல்லாத தீர்வு!

வாழ்க்கை முழுவதும் உற்சாகமாக ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு மிகப்பெரிய தடையாக மாறுவது, இந்த நாள்பட்ட முழங்கால் வலி. இந்தப் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் மிகுந்த வேதனையையும் வலியையும் எதிர்கொள்கிறார்கள். இதற்கு தீர்வு அறுவை சிகிச்சை மட்டுமே என்று பலரும் நம்புகிறார்கள்.  ஆனால் உண்மை என்னவென்றால், முழங்கால் வலியை சரிசெய்ய அறுவை சிகிச்சை கத்தியை நாடவேண்டிய அவசியமில்லை. 

அதற்கு பதிலாக, வலியிலிருந்து முழு நிவாரணம் வழங்குவதோடு, பாதுகாப்பாக சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு திரும்ப அறுவை சிகிச்சை இல்லாத பல வழிகள் இருக்கிறது. இதுகுறித்து, சென்னை எபியோன் வலி மேலாண்மை மையத்தின் (EPIONE PAIN MANAGEMENT CENTER) மருத்துவத் தலைவர் டாக்டர் சேதனா சேதன் விவரிக்கிறார். 

எபியோன் வலி மேலாண்மை மையம்  என்பது இந்தியாவின் இயங்கும் அறுவை சிகிச்சை அல்லாத, பல-துறை மற்றும் முழுமையான வலி மேலாண்மையில் கவனம் செலுத்தும் சிறப்பு மையமாகும்.

அறுவைசிகிச்சையை தவிர்க்கலாம்!

முழுமையான தசைநார் கிழிதல், சிக்கலான எலும்பு முறிவு அல்லது கடுமையான மூட்டு சேதம் போன்ற பெரிய காயங்கள் இல்லாத, பெரும்பாலான முழங்கால் வலிகளை அறுவை சிகிச்சை இல்லாமல் சரிசெய்ய முடியும்.  தினசரி தேய்மானம் (osteoarthritis), தசைநாண்களின் வீக்கம் (tendinitis) அல்லது திரவப் பைகள் (bursitis) மற்றும் முழங்காலைச் சுற்றியுள்ள சுளுக்கு போன்ற பொதுவான பிரச்சினைகளுக்கு, அறுவை சிகிச்சை பொதுவாக தேவையில்லை.

தயக்கம் ஏன்? 

முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொள்வது வயதானோர்களிக்கு பெரிய பிரச்னை அல்ல. ஆனால், அந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு தேவைப்படும் பராமரிப்பே மிகப்பெரிய சவால். ஏனெனில்,  அறுவைசிகிச்சைக்குப் பிறகு, யார் தங்களைப் பராமரிப்பார்கள் என்ற கவலையால் அவர்கள் பெரும்பாலும் அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறார்கள். 

ஏனெனில், வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் அல்லது பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு சுமையாக இருப்பதை பெரும்பாலான முதியவர்கள் விரும்புவதில்லை. 

புரட்சிகர நவீன சிகிச்சை முறை! 

அறுவைசிகிச்சை அல்லாத அதிநவீன சிகிச்சை முறைகள் இந்த பிரச்னைக்கு தீர்வாக இருக்கிறது. அதாவது, இயற்கையான குணப்படுத்தும் திறன்களைத் தூண்டிவிட்டு, பிரச்னையை சரி செய்யும் முறையாகும்.  

அதில், பிளேட்லெட்-ரிச் பிளாஸ்மா (PRP) சிகிச்சை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். என்னவென்றால், நோயாளியின் ரத்தத்தில் 10மிலி அளவில் பிளாஸ்மாவை பிரித்து எடுத்து, அது ஊசி வழியாக பாதிக்கப்பட்ட பகுதியில் செலுத்தப்படும். 

இதன்மூலம், இயற்கையாகவே மூட்டுவலி மற்றும் டென்டினிடிஸ் போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும்.  PRP சிகிச்சை என்பது வழக்கமான மருத்துவ முறையை விட சிறந்தது; இது உடலின் உள்ளார்ந்த திறனைக் கொண்டு சரிசெய்து குணப்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். உடலின் சொந்த பிளேட்லெட்டுகளை ஒருமுகப்படுத்தி அதன்மூலம் சிகிச்சையை வழங்கும் முறையாகும். 

சிகிச்சையின் நன்மைகள் 

இந்த சிகிச்சை ஒரு சிறிய ஊசி மூலம், அரைமணி நேரத்தில் முடியக்கூடிய மிக எளிமையான சிகிச்சை முறையாகும். இதற்கு எந்த அறுவை சிகிச்சையும் தேவையில்லை. வெளியூரிலிருந்து சிகிச்சைக்காக வருபவர்கள், சிகிச்சை முடிந்து அன்றைக்கே வீடு திரும்பலாம். 

மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை. அதோடு, மறுநாள் வழக்கம் போல் தங்கள் அன்றாட வேலைகளை தொடங்கலாம். நோய் தொற்றுதல், பக்கவிளைவுகள் தோன்ற வாய்ப்புகள் இல்லை. சிகிச்சை காலத்தில் அல்லது சிகிச்சைக்குப் பிறகான பராமரிப்புக்காக மற்றவர்களை நம்பி இருக்க வேண்டியதும் இல்லை. 

இந்த சிகிச்சை யாருக்கானது? 

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 50 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே மூட்டுவலி பிரச்னையால் பாதிப்புக்குள்ளானார்கள். ஆனால், உடலுழைப்பில்லாத வாழ்க்கைமுறையினால் 18 வயதுமுதல் 80 வயது வரை அனைவருக்குமே மூட்டுவலி பிரச்னை ஏற்படுகிறது. அனைத்து வயதினருக்கும் ஏற்படும் மூட்டுவலி பிரச்னைக்கும் இந்த PRP சிகிச்சை சரியான தீர்வாகும். 

வலி இல்லா வாழ்க்கை! 

மூட்டு வலி மட்டுமல்ல கழுத்து வலி, சியாடிகா, தோள்பட்டை வலி, முகத்தில் ஏற்படும் வலி, கை கால் வலி மற்றும் புற்றுநோய் வலி போன்ற அனைத்து வித வலிகளுக்கும் எந்தவித அறுவை சிகிச்சை இல்லாமல், மயக்க மருந்து இல்லாமல் எளிமையான வலி நிவாரண சிகிச்சையே இந்த PRP சிகிச்சையாகும். நவீன வலி மேலாண்மை தீர்வுகளில், PRP சிகிச்சை இயற்கை வழியில் நமக்கு கிடைத்த அறிவியல் பூர்வமான பொக்கிஷம். 

- ஜாய் சங்கீதா