டியர் டாக்டர்



*குங்குமம் டாக்டர் டீம் தொகுத்து வழங்கும் ‘மெடிக்கல் ட்ரென்ட்ஸ்’ பகுதி மிகவும் அருமை. குட்டி குட்டிச் செய்திகளாக புரட்டும்போதே படிக்க வைக்கும் வகையில் இருக்கிறது. வெள்ளரிக்காய் வெயிலுக்கு மட்டுமல்ல; வாய் துர்நாற்றத்தைப் போக்கவும் உதவும் என்பது உள்ளிட்ட மருத்துவத் தகவல்களின் அணிவகுப்புகள் பயனுள்ளதாகவும் இருக்கிறது.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.    

*கொளுத்தும் கோடை வெயிலுக்கு பாதாம் பிசின் ரோஜா குல்கந்தும் கை கொடுக்கும் மாமருந்து சம்மருக்கு கிடைத்திட்ட ஸ்பெஷல் விருந்து. சாக்லெட் சந்தேகங்கள் ஒவ்வொன்றும் ஹைலைட். Sarcopenia நோயைப் பற்றிய முதியோர் நல மருத்துவர் நடராஜன் அவர்களின் தெளிவான விளக்கம் சீனியர்களுக்கு கிடைத்திட்ட ஒரு பரிசு. குழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம் என்கிற தகவல் அதிர்ச்சி மட்டுமே அல்ல நல்ல விழிப்புணர்வும் கூட. முலாம்பழம் ஒரு வைட்டமின் தொழிற்சாலை என நிரூபித்தது வியப்பூட்டியது.
- சுகந்தி நாராயண், வியாசர்பாடி.

*சென்னையில் இருக்கும் பெரும்பாலான மருத்துவமனைகள் பற்றிய கட்டுரைகளை ‘ரவுண்ட்ஸ்’ பகுதி கவர் செய்து வந்தது. வெளியூர் மருத்துவமனைகளைப் பற்றிய விபரங்களையும் இதுபோல் வெளியிடலாமே என்று எங்களைப் போல பல வாசகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தோம். திடீர் ஆச்சரியமாக எங்கள் கோவை மருத்துவமனை பற்றியே கட்டுரை வெளியிட்டிருந்தது மகிழ்ச்சியைத் தந்தது.
- ஆர். பெரியசாமி, கோவை.

*சரும நலன் குறித்து மருத்துவர் வானதி இத்தனை இதழ்களாக பல அரிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்து வந்தார். இதுவரை கூறிவந்த தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். தொடர் முடிவடைந்தது சற்று ஏமாற்றம் தந்தது. புத்தகமாக வெளிவர வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
- வெண்ணிலா, திருக்கழுக்குன்றம்.

*நீரிழிவால் வருகிற பாத நோய் பற்றிய இண்டர்னெல் மெடிசன் சிறப்பு மருத்துவர் சாமிக்கண்ணு தந்திருந்த பேட்டி பயன் உள்ளதாக இருந்தது. பாதங்களில் வரும் காயம் பற்றியும் கட்டுரை வெளியிடுங்கள்.
- சி.கோபாலகிருஷ்ணன், மேற்கு தாம்பரம்.

*கோடை காலத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது பற்றி மகப்பேறு மருத்துவர் ஹேமலதா விரிவாக விளக்கிக் கூறியிருந்தார். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உடல் நலனைப் பாதுக்காக்க மேற்கொள்ள வேண்டிய வழிகள் பற்றிக் கூறியிருந்ததைப் பின்பற்றினாலே வெயில் காலத்தை இனிமையாகக் கடந்துவிடலாம்.
- எல்ஜின் ஜோசப், செங்குன்றம்