டியர் டாக்டர்



உடற்பயிற்சி எப்படி செய்வது என வெறும் 15 ரூபாயில் குங்குமம் டாக்டர் சொன்னது ஜோர்! அதுவும் இப்போது ஆயிரக்கணக்கிலே ஏதோ ஏதோ மெஷினில் வாங்கி உடற்பயிற்சி செய்வது வீண்தான் என எண்ணத் தோன்றுகிறது.
- எஸ்.துரைசிங் செல்லப்பா, உருமாண்டம்பாளையம், கோவை.

‘நோய் அரங்கம்‘ பகுதியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வினை டாக்டர் கு.கணேசனின் கட்டுரை தோற்றுவிப்பதாக இருந்தது.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி, கரூர்.

சுய மருத்துவம் எவ்வளவு ஆபத்தானது, மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் வாங்கி சாப்பிடுவது எவ்வளவு பயங்கரமானது என்கிற விவரங்களை பொட்டில் அறைகிற மாதிரி சொல்கிறது, டாக்டர் மு.அருணாச்சலத்தின் ‘ப்ரிஸ்க்ரிப்ஷன்’ பகுதி.
- ஜே.எஸ்.செல்வராஜ், சென்னை - 89.

‘வரகு’ மகத்துவம் பற்றி தெளிவாக மல்லிகா பத்ரிநாத் சொல்லியதுடன் ஸ்பெஷல் ரெசிபியையும் அளித்து, வரகு வாங்கிப் பயன்படுத்த தூண்டி விட்டார். ‘ஜனவரி 12 - பார்மஸிஸ்ட் டே’ என்று சொல்லியதுடன் நுகர்வோராகிய நாம் மருந்துக்கடைகளில் மருந்து வாங்கும்போது எதை எதை கவனிக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லி வழிகாட்டியிருந்தார் மேகநாதன்.
‘அன்றிருந்த நெல் வகைகள் பல வகைகளிலும் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்தன. அரிசியின் மகத்துவம் பற்றியும் தெளிவாகக் கூறி இயற்கை வேளாண்மைக்கு மாறுவதே ஏற்புடையது என உணர்த்தி விட்டீர்கள்.
- வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல்.

‘ஆரோக்கிய இல்லம் அமைப்போம் வாருங்கள்’ - எக்காலத் துக்கும் பொருந்தக்கூடிய, எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமான கட்டுரை! நன்றி. அப்புறம், 6 அழகிய குழந்தைப் படங்களை தாங்கி வந்திருந்த மாத நாட்காட்டி ரொம்பவும் அழகு!
- பாப்பாக்குடி இரா.செல்வமணி, திருநெல்வேலி.

பாபா என்றால் பக்தி நினைவுக்கு வரும். மெடிசன் பாபா என்றால் இனி தன்னலமற்ற சேவை நினைவுக்கு வரும்!
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

பிறப்பின்போது எடை குறைந்த குழந்தைகளுக்கு இன்குபேட்டருக்கு மாற்றாக குழந்தையின் தாயாரின் உடல் வெப்பம் மூலமாக குழந்தைக்கு உயிரூட்டவும் செய்ய முடியும் என்பது புதிய மருத்துவ கண்டுபிடிப்பு! இதன் வழியாக உயிர் பெற்றவர் இயக்குநர் மகேந்திரன் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி!
- எஸ்.மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்.

தீபாவளி பட்டாசு விஷயத்தில்தான் கை வைக்கிறார்கள் என்றாலும் நாம் உண்ணும் உண(ர்)விலும் சீன(£) (பயங்)கரம் நீட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது. பிளாக் லிஸ்டில்
சேர்க்கணும் பிளாஸ்டிக் அரிசியை! 

டயாபடீஸ் பற்றி இவ்வளவு ‘ஸ்மார்ட்’டாக சொல்லிட உங்களைத் தவிர யார் இருக்கிறார்கள்? தெளிவான விளக்கம் பாராட்டுக்குரியது. குழந்தைகளின் ‘வளர்மைல் கற்கள்’ விவரம் வியக்க வைத்தது.
- சிம்மவாஹினி, சென்னை-39.