வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு  அறிவிப்புகள் இங்கே...

தமிழக நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி பணி!

நிறுவனம்: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி-யின் வேலைவாய்ப்பு அறிவிப்பு
வேலை: தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் சிவில் ஜட்ஜ் எனப்படும் குடிமையியல் நீதிபதி வேலை
காலியிடங்கள்: மொத்தம் 176
கல்வித் தகுதி: சட்டப் படிப்பில் டிகிரி. புதிய பட்டதாரிகளும், ஏற்கனவே வக்கீல்களாக பணியாற்றுபவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: புதியவர்கள் என்றால் 22 முதல் 27-க்குள்ளும், ஏற்கனவே பணியாற்றுபவர்கள் என்றால் 25 முதல் 40-க்குள்ளும் இருத்தல் வேண்டும்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 9.10.19
மேலதிக தகவல்களுக்கு: www.tnpsc.gov.in

துணை ராணுவப் படையில் சப்-இன்ஸ்பெக்டர் பணி!

நிறுவனம்: ஷசாஸ்திரா சீமாபல் எனும் துணை ராணுவப் படையில் வேலை
வேலை: எஸ்.சி-களுக்கான சப்-இன்ஸ்பெக்டர் வேலை. இதில் ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
காலியிடங்கள்: மொத்தம் 206
கல்வித் தகுதி: டிகிரி
வயது வரம்பு: 18 முதல் 23 வரை
தேர்வு முறை: உடற் தகுதி, எழுத்துத்தேர்வு
மருத்துவ சோதனை மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.10.19
மேலதிக தகவல்களுக்கு: www.ssbrett.gov.in

ரயில்வே கேட்டரிங்கில் சமையல்காரர் வேலை!

நிறுவனம்: ரயில்வே ரெக்ரூட்மென்ட் செல் எனும் அமைப்பின் வடக்கு ரயில்வேக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
வேலை: கேட்டரிங் துறையில் குக்(சமையல்காரர்) மற்றும் சர்வீஸ் வேலைகள்
காலியிடங்கள்: மொத்தம் 118
கல்வித் தகுதி: 10வது படிப்புடன் வேலை தொடர்பாக ஐ.டி.ஐ படிப்பு
வயது வரம்பு: 18 முதல் 33 வரை
தேர்வு முறை: எழுத்து மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.10.19
மேலதிக தகவல்களுக்கு: www.rrcnr.org

இந்திய ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி!

நிறுவனம்: இந்திய அரசின் தலைமை வங்கியான ரிசர்வ் பேங்க்
வேலை: ‘பி’ கிரேட் பதவியில் 3 பிரிவுகளில் ஆபீசர் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 199
கல்வித் தகுதி: டிகிரி
வயது வரம்பு: 21 முதல் 30 வரை
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11.10.19
மேலதிக தகவல்களுக்கு: www.rbi.org.in

ராணுவ பாதுகாப்பு ஆய்வுத் துறையில் வேலை!

நிறுவனம்: மத்திய அரசின் டிஃபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் ஆர்கனைசேஷன் எனும் பாதுகாப்பு ஆய்வுக்கான வளர்ச்சி நிறுவனத்தில் வேலை
வேலை: அட்மினிஸ்ட்ரேஷன் அசிஸ்டென்ட், ஸ்டெனோ, கிளார்க், ஸ்டோர் கீப்பர் அசிஸ்டென்ட், செக்யூரிட்டி அசிஸ்டென்ட், ஃபயர் எஞ்சின் டிரைவர், குக், வெஹிக்கில் டிரைவர் மற்றும் ஃபயர் மேன் என 9 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 224
கல்வித் தகுதி: 10வது மற்றும் +2 தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 27 வரை
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.10.19
மேலதிக தகவல்களுக்கு: www.drdo.gov.in

மத்திய அரசு நிறுவனங்களில் ஸ்டெனோ வேலை!

நிறுவனம்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான எஸ்.எஸ்.சி-யின் வேலைவாய்ப்பு அறிவிப்பு
வேலை: ஸ்டெனோ கிரேட் ‘சி’ மற்றும் ‘டி’ வேலை
காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
கல்வித் தகுதி: பிளஸ் 2
வயது வரம்பு: ‘சி’ பிரிவுக்கு 18 முதல் 30 வரை, ‘டி’ பிரிவுக்கு 18 முதல் 27 வரை,
தேர்வு முறை: எழுத்து, தொழில் தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.10.19
மேலதிக தகவல்களுக்கு: https://ssc.nic.in

பட்டதாரிகளுக்கு பஞ்சாப் சிந்த் வங்கியில் வேலை

நிறுவனம்: பொதுத்துறை வங்கியான பஞ்சாப் சிந்த் வங்கி
வேலை: கம்பெனி செக்ரட்டரி, செக்யூரிட்டி ஆபீசர், டெக்னிக்கல் ஆபீசர், சார்ட்டர்ட் அக்கவுன்ட்டன்ட் உட்பட 11 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 168
கல்வித் தகுதி: டிகிரி, பி.ஜி, பி.ஈ, பி.டெக் மற்றும் சி.ஏ. படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த வேலைகள் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: 20 முதல் 45 வரை
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10.10.19
மேலதிக தகவல்களுக்கு: www.psbindia.com

மத்திய அரசின் ஹெவி எஞ்சினியரிங் கார்ப்பரேஷனில் வேலை!

நிறுவனம்: மத்திய அரசின் ஹெவி எஞ்சினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் எனும் துறையின் ஜார்கண்ட் மாநிலக் கிளையில் வேலை
வேலை: டெக்னிக்கல் ஒர்க்கர்ஸ், ஜி.எம், சீனியர் மேனேஜர் உட்பட 12 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 70
கல்வித் தகுதி: 10வது படிப்பு, ஐ.டி.ஐ, பி.இ, மேனேஜ்மென்ட் டிப்ளமோ/டிகிரி, சி.ஏ. மற்றும் ஐ.சி.டபிள்யூ போன்ற படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த வேலைகள் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: இந்த வேலைகள் ஒன்றிற்கு விண்ணப்பிக்க 33 வயதிலிருந்து 54 வயது வரைக்கும் இருந்தால் பொருத்தமான வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
தேர்வு முறை: எழுத்து, தொழில் திறன் தேர்ச்சி மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 4.10.19
மேலதிக தகவல்களுக்கு: www.hecltd.com