10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு CISF-ல் வேலை! 914 பேருக்கு வாய்ப்பு!வாய்ப்பு

பொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாப்புக்காக 1969ம் ஆண்டு உருவாக்கப்பட்டது மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF). மத்திய துணை ராணுவப் படைகளில் ஒரு பிரிவான CISF, அனல் மின்நிலையங்கள், விமானநிலையங்கள், ரயில்வே, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் என நாட்டின் மிக முக்கிய தளங்களில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகிறது. இத்துணைராணுவப் படையில் Constable (Tradesman) பணிகளுக்கான சுமார் 914 காலி பணியிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.

காலியிடங்கள்: தற்போது Cook, Cobbler, Barber, Washer-man, Carpenter, Sweeper, Painter போன்ற தொழிற்பிரிவு வாரியாக  சுமார் 914 காலியிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தேர்ந்தெடுக்கப்போகும் தொழிற்பிரிவுகளில் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: விண்ணப்பிக்க விரும்புவோர் 1.10.2019 அன்றின்படி 18 வயது முதல் 23 வயதிற்குள் இருத்தல் வேண்டும். SC/ST பிரிவினருக்கு ஐந்து வருடமும், OBC பிரிவினருக்கு மூன்று வருடமும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது. முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.    

உடல் தகுதி: பொதுப் பிரிவினர் 170 செ.மீ உயரமும், 80 செ.மீ மார்பளவு அகலமும் அதோடு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் கொண்டிருத்தல் வேண்டும். SC/ST பிரிவினர் 162.5 செ.மீ உயரமும், 76 செ.மீ மார்பளவு அகலமும் அதோடு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருத்தல் வேண்டும்.
உடற்திறன் தகுதி: விண்னப்பதாரர்கள் 1.6 கிலோமீட்டர் தூரத்தை 6 ½ நிமிடத்தில் ஓடிக் கடக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற் திறன் தேர்வு (Trade Test), உடல் தகுதி திறன் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை  அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.cisfrectt.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்யவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100ஐ ‘Assistant Commandant, DDO, CISF. SZ HQrs, Chennai’ என்ற முகவரியில் Indian Postal Order ஐ எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.10.2019. SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விளக்கு அளிக்கப்படுகிறது. பூர்த்தி செய்த படிவத்தை ‘The DIG, CISF (South Zone) HQrs, ‘D’ Block, Rajaji Bhavan, Besant Nagar, Chennai-90’ என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டும். மேலதிக தகவல்களுக்கு www.cisfrectt.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

-துருவா