ராணுவப் பள்ளிகளில் ஆசிரியர் பணி!வாய்ப்பு

8000 பேருக்கு வாய்ப்பு!

நாடு முழுவதும் மொத்தம் 137 ஆர்மி பப்ளிக் ஸ்கூல் (ராணுவப் பள்ளிகள்) செயல்படுகின்றன. இந்தப் பள்ளிகளில் தற்போது மொத்தமாக 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. முதுநிலைப் பட்டப்படிப்பு, பி.எட் படித்தவர்கள் அந்தந்தத் துறை சார்ந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி

PGT: முதுநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், தங்களது முதுநிலைப் பட்டப்
படிப்பிலும், பி.எட் படிப்பிலும் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
 TRT: இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், பட்டப்படிப்பிலும், பி.எட் படிப்பிலும் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
 PRT: பிரைமரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், பட்டப்
படிப்பு, ஆசிரியர் கல்வியியல் பட்டயப்படிப்பு ஆகிய இரண்டிலும் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

ஐந்து வருடம் ஆசிரியர் பணி அனுபவம் பெற்றவர்கள் அதிகபட்சமாக 57 வயதுக்குள் இருக்க வேண்டும். ஐந்து வருடங்களுக்குள் பணி அனுபவம் உள்ளவர்கள், அதிகபட்சமாக 29 வயதிற்குள்ளாக இருக்கவேண்டும். பிரைமரி வகுப்புகளுக்கு 36 வயதுக்குள் இருக்கவேண்டும். வயது வரம்பு 1 ஏப்ரல் 2020 தேதியின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட பணியில் சேரத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://aps-csb.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். புகைப்படம், வயதுச் சான்று, கல்விச் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஐ டெபிட்/கிரெடிட் கார்டு மூலம் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

இப்பணிகளுக்கு கம்ப்யூட்டர் ஸ்கிரீனிங் டெஸ்ட், நேர்முகத் தேர்வு, ஆசிரியப்பணித் திறன் மற்றும் கணினி பயன்பாட்டுத் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில், சென்னை, கோவை ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.9.2019 / தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்படும் தேதி: 4.10.2019 / ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 19.10.2019/20.10.2019 / ஆன்லைன் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்: 30.10.2019  
இதுபற்றிய முழுமையான விவரங்களுக்கு ராணுவப் பள்ளியின் http://aps-csb.in/Candidate/GeneralInstructions.aspx அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

- தோ.திருவரசு