அடடே ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!See Vs Seeing (Part 1)

லேப்டாப்பில் எதையோ ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்த ரகுவின் எதிரில், ‘‘ ‘We are seeing with our eyes’ இதுல என்னங்க சார் தப்பு இருக்கு?” என்றவாறே வந்தமர்ந்தான் ரவி. உடனே ரகு, ‘‘ ‘Seeing’ என்பது ஒரு Verb of Perception. அதாவது, சில வினைச்சொற்களை நம்மால் தொடர்வினையாக (Progressive or Continuous form) உபயோகப்படுத்த முடியாது. உதாரணத்திற்கு, see, watch, look, hear, listen, feel and taste போன்ற வினைச்சொற்களை Verbs of Perception எனலாம். அதனால We see with our eyes என்றுதான் சொல்லமுடியும். அதைப் போலவே Verbs of Cognition, Verbs of Emotions என பலவகை வினைச்சொற்கள் வகைகள் இருக்கின்றன.

அவற்றை நாம் மற்ற சாதாரண வினைச்சொற்களைப் (speak, run, read, write etc.,) போல தொடர்வினையாக உபயோகப்படுத்த முடியாது. அது மட்டுமல்ல... believe, belong, forget, hate, hear, know, like, love, mean, need, prefer, realize, remember, see, seem, send, suppose, understand, want, think (when it means ‘believe’) and have (when it means ‘possess’) இதுபோன்ற வினைச்சொற்களுக்கும் இந்த விதி நன்றாகப் பொருந்தும்’’ என்றார்.

ரவிக்கு பாடம் நடத்த ஆரம்பித்த ரகு, ‘‘சரி. இப்போ see என்ற வார்த்தைக்கு மட்டும் என்னென்ன அர்த்தங்கள் உள்ளன என்பதைப் பார்க்கலாம்.

1. to use eyes - I saw you yesterday. ( நான் உன்னை நேற்று பார்த்தேன்)
2. To have or use the power of sight. (கண் பார்வை) Oh My God! She can never see again. (அடகடவுளே! அவளால் இனி பார்க்க இயலாது) (She has become blind) (அவள் குருடாகிவிட்டாள்)
3. Watch - I had been to see a movie. (சினிமா பார்க்கப் போயிருந்தேன்)
4. Look up for information (தேடுதல்) - To get the answer, See page 189. (விடை வேண்டுமா? 189ஆம் பக்கத்தைப் பார்)
5. meet by chance (to be nearby and recognize) (எதிர்பாரா விதமாய் பார்க்க நேரிடல், அடையாளம் கண்டு கொள்ளுதல்) Guess who I saw yesterday?(நேத்து நான் யாரைப் பார்த்தேன் தெரியுமா? கண்டுபிடி பார்க்கலாம்.)
6. Visit - come and see me again. (என்னை மீண்டும் வந்து சந்தி)
7. have meeting (சந்தித்து விசாரணை செய்தல்) You are so sick that you ought to see a doctor. (டாக்டர் பார்க்க வேண்டிய அளவுக்கு நீ நோயுற்றிருக்கிறாய்.) இப்படிதான் பல அர்த்தங்கள் உள்ளன” என்ற ரகு,‘‘ரவி Time up. See you later” என்றபடியே எழுந்து கேன்டீனுக்குச் சென்றார்.

- சேலம் ப.சுந்தர்ராஜ்