வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு விமான ஆணையத்தில் வேலை!

நிறுவனம்: ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனும் விமான சேவைக்கான அரசு ஆணையம்
வேலை: ஜூனியர் அசிஸ்டென்ட் - ஃபையர் சர்வீஸ் மற்றும் சீனியர் அசிஸ்டென்ட்-எலக்ட்ரானிக்ஸ் ஆகிய இருபிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 186. இதில் முதல் பிரிவில் 147 இடங்களும்,  இரண்டாவது பிரிவில் 39 இடங்களும் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: முதல் வேலைக்கு 10வது படிப்பு, +2 படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு அவசியம். இத்தோடு கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான சான்றிதழும் வேண்டும். இரண்டாவது வேலைக்கு எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன் மற்றும் ரேடியோ எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளில் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ படிப்பு அவசியம்
வயது வரம்பு: 18 முதல் 30 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.7.18
மேலதிக தகவல்களுக்கு: www.aai.aero

பி.இ. பட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை!

நிறுவனம: இண்டியன் ஏர்ஃபோர்ஸ் எனும் இந்திய விமானப்படை
வேலை: 3 முக்கிய பிரிவுகளில் வேலை உண்டு. ஆஃப்கேட் எனும் நுழைவுத் தேர்வு மூலம் ஃப்ளையிங் மற்றும் கிரவுண்ட் டியூட்டி பிரிவில் டெக்னிக்கல் மற்றும் நான் -டெக்னிக்கல் துறைகளில் வேலை. இரண்டாவது முக்கியப் பிரிவான என்.சி.சி ஸ்பெஷல் என்ட்ரி எனும் நுழைவுத்தேர்வு மூலம் ஃப்ளையிங் வேலை. மூன்றாவது முக்கிய பிரிவு மெட்டீரியாலஜி எனும் வானிலை ஆய்வுப் பிரிவு. இதுவும் ஒரு நான்-டெக்னிக்கல் பிரிவுதான்
காலியிடங்கள்: மொத்தம் 182. இதில் ஆஃப்கேட் பிரிவில் உள்ள ஃப்ளையிங்கில் 42, கிரவுண்ட் டியூட்டி டெக்னிக்கலில் 66 மற்றும் கிரவுண்ட் டியூட்டி நான்-டெக்னிக்கலில் 40 இடங்கள் அதிகபட்சமாக காலியாக உள்ளது
கல்வித் தகுதி: ஆஃப்கேட் பிரிவில் உள்ள ஃப்ளையிங் வேலைக்கு இயற்பியல் அல்லது கணிதத்தில் டிகிரி அல்லது பி.இ., பி.டெக் படிப்பு. அந்தப் பிரிவில் உள்ள இரு கிரவுண்ட் டியூட்டி வேலைகளுக்கு பி.ஜி. படிப்பு. என்.சி.சி வேலைக்கு அதில் சான்றிதழ். மெட்டீரியாலஜி பிரிவுக்கும் அது தொடர்பான படிப்பு.
வயது வரம்பு: ஃப்ளையிங் வேலைக்கு 20 முதல் 24 வரை. கிரவுண்ட் டியூட்டி வேலைகளுக்கு 20 முதல் 26 வரை
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.7.18
மேலதிக தகவல்களுக்கு: www.indianairforce.nic.in

ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு இண்டியன் ஆயிலில் வேலை!

நிறுவனம்: பொதுத்துறை நிறுவனமான இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் தென்னகப் பிராந்தியம்
வேலை: 2 பிரிவுகளில் வேலை. ஜூனியர் ஆபரேட்டர் மற்றும் ஏவியேஷன் துறையில் ஜூனியர் ஆபரேட்டர்
காலியிடங்கள்: மொத்தம் 108. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு மட்டும் இரு பிரிவுகளிலும் சேர்த்து 30 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: முதல் வேலைக்கு 10வது படிப்
புடன் ஐ.டி.ஐ படிப்பும், இரண்டாவது வேலைக்கு +2 படிப்புடன் கனரக வாகனம் ஓட்டுவதற்கான சான்றிதழும் அவசியம்
வயது வரம்பு: 18 முதல் 26 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.7.18
மேலதிக தகவல்களுக்கு: www.iocl.com

எய்ம்ஸ் மருத்துவ ஆய்வு மையத்தில் உதவிப் பேராசிரியர் பணி!

நிறுவனம்: எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சியின் நியூ டெல்லி கிளை
வேலை: அசிஸ்டென்ட் ப்ரொஃபசர் மற்றும் லெக்சரர்
காலியிடங்கள்: மொத்தம் 150. இதில் முதல் வேலையில் மட்டுமே 149 இடங்கள் காலியாக உள்ளது. முதல் வேலையிலும் அனாடமி, மெடிசின், பயோடெக்னாலஜி, ஈ.என்.சி உட்பட பல துறைகளில் காலியிடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது
கல்வித் தகுதி: பி.எச்டி தேர்ச்சி
வயது வரம்பு: 50க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 9.7.18
மேலதிக தகவல்களுக்கு: https://www.aiims.edu/en.html

என்.ஐ.டி-யின் டெக்னிக்கல் பிரிவில் வேலை!

நிறுவனம்: தேசிய தொழில்நுட்பக் கல்வி நிலையம் எனப்படும் என்.ஐ.டி-யின் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வேலை
வேலை: டெக்னிக்கல் ஸ்டாஃப் எனும் பதவியில் 11 துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 125
கல்வித் தகுதி: 11 துறைகளுக்கு தனித்தனியான கல்வித் தகுதி கோரப்பட்டுள்ளது. துறைகள் வாரியாக டிப்ளமோ., பி.டெக்., பி.இ., ஐ.டி.ஐ.,
எம்.சி,ஏ., பி.எஸ்சி. மற்றும் எம்.எஸ்சி., படித்தவர்கள் இந்த வேலைகளில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 5.7.18
மேலதிக தகவல்களுக்கு: www.nitc.ac.in

எல்லைப் பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பணி!

நிறுவனம்: பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் எனும்
மத்திய அரசின் எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை
வேலை: டெக்னிக்கல் துறையில் கான்ஸ்டபிள்
பதவியிலான வேலை
காலியிடங்கள்: மொத்தம் 207. வெஹிகிள் மெக்
கானிக், வெல்டர், அப்ஹோல்ஸ்டர் உட்பட 11 துறை
களில் வேலை. இந்த இடங்களில் பொதுப் பிரிவுக்கு 143, எஸ்.சி., 32, எஸ்.டி. ந்24, ஓ.பி.சி. 8 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது
கல்வித் தகுதி: 10வது படிப்புடன் அந்தந்த வேலைத் துறைகள் தொடர்பாக ஐ.டி.ஐ படிப்பில் தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 25 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 5.7.18
மேலதிக தகவல்களுக்கு: www.bsf.nic.in

தொகுப்பு: டி.ரஞ்சித்