+2 முடித்த மாணவர்களுக்கான உதவித்தொகைகள்!



ஸ்காலர்ஷிப்

+2 முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மத்திய/மாநில அரசுகளும் சில தனியார் தொழில் நிறுவனங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு விதமான கல்வி உதவித்தொகைகளை வழங்கிவருகின்றன.

ஏழை எளிய மாணவர்கள் தங்கள் உயர்கல்வியை மேலும் தொடர இதுபோன்ற உதவித்தொகைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படி வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகளில் ஒரு சிலவற்றைப் பற்றி இந்த இதழில் பார்ப்போம்....

மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்காலர்ஷிப் (நேஷனல் ஃபண்ட்)

வழங்குவது: மினிஸ்ட்ரி ஆஃப் சோஷியல் ஜஸ்டிஸ் அண்டு எம்பவர்மென்ட்
யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று பட்டப்படிப்பு அல்லது புரொஃபஷனல் படிப்பு களில் சேரும் மாணவர்களுக்குக் கிடைக்கும். 40%க்கு மேல் ஊனமுடையவர்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒன்றரை லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 500 மாணவர்
களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
எவ்வளவு: கல்விக் கட்டணம் மற்றும் மாதமொன்றுக்கு ரூ.700 முதல் 1000 வரை
உதவித்தொகை
விண்ணப்பிக்க: உயர் படிப்பில் சேர்ந்த பிறகு, கல்லூரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: www.nhfdc.nic.in

மெரிட் கம் மீன்ஸ் ஸ்காலர்ஷிப் ஃபார் ஸ்டூடன்ட்ஸ் ஆஃப் மைனாரிட்டிஸ்

வழங்குவது: சிறுபான்மை அமைச்சகம், மத்திய அரசு
யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று புரொஃபஷனல் படிப்புகளில் சேரும் முஸ்லிம், சீக்கியர், பார்சி, பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் சமண மதத்தை சேர்ந்த மாணவர்
களுக்கு வழங்கப்படும். பெற்றோரின்
ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டரை லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
+2 தேர்வில் 50 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 1000
மாணவர்களுக்கு வழங்கப்படும்.
எவ்வளவு: கல்விக் கட்டணம், மற்றும் ஆண்டுக்கு ரூ.20,000 ரூபாய்.
விண்ணப்பிக்க: படிப்பில் சேர்ந்த பிறகு,
கல்லூரியின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: www.minorityaffairs.gov.in

ஹியூமன் வெல்ஃபேர் ட்ரஸ்ட் லோன் ஸ்காலர்ஷிப்

வழங்குவது: ஹியூமன் வெல்ஃபேர் ட்ரஸ்ட் அமைப்பு, இந்தியா
யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று பட்டப்படிப்பு அல்லது புரொஃபஷனல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்குக் கிடைக்கும். +2 தேர்வில் 80%க்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.72,000 ரூபாய்க்கு மிகாமலிருக்க வேண்டும். 100 மாணவர்
களுக்கு வழங்கப்படும்.
எவ்வளவு: கல்வி கற்க தேவைப்படும் முழுச்செலவும் (படிப்பு முடிந்தவுடன்/வேலை கிடைத்தவுடன் பெற்ற பணத்தை வட்டியில்லாமல் எளிய தவணை முறையில் திரும்ப செலுத்த வேண்டும்)
விண்ணப்பிக்க: ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள்
கூடுதல் விவரங்களுக்கு: www.hwtngo.org
 
போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் ஃபார்

எஸ்.சி/எஸ்.டி. ஸ்டூடண்ட்ஸ்
வழங்குவது: மினிஸ்ட்ரி ஆஃப் சோஷியல் ஜஸ்டிஸ் அண்டு எம்பவர்மென்ட், மத்திய அரசு
யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சேர்ந்து முழு நேரப் படிப்பு களைப் படிக்கும் எஸ்.சி/எஸ்.டி. மாணவர்
களுக்கு வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமலிருக்க வேண்டும். 1000 மாணவர்களுக்கு வழங்கப்படும்.
எவ்வளவு: கல்விக் கட்டணம், தங்குமிட கட்டணம் மற்றும் புத்தகம் வாங்குவதற்கான தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க: உயர்கல்வியில் சேர்ந்த பிறகு, கல்லூரி மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: http://socialjustice.nic.in/scholarships.php

போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் ஃபார் ஓ.பி.சி

வழங்குவது: மினிஸ்ட்ரி ஆஃப் சோஷியல் ஜஸ்டிஸ் அண்டு எம்பவர்மென்ட், மத்திய அரசு
யாருக்குக் கிடைக்கும்: +2வில் 60%  மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற ஓ.பி.சி  பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சேர்ந்து முழுநேரப் படிப்பில் பயில வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் ரூபாய்க்கு மிகாமலிருக்க வேண்டும். மாநில அரசு பரிந்துரைக்கும் தகுதியுடைய அனைவருக்கும் வழங்கப்படும்.
எவ்வளவு: கல்விக்கட்டணம், தங்குமிடக் கட்டணம் மற்றும் புத்தகம் வாங்குவதற்கான தொகையில் பகுதியளவு வழங்கப்படும்.
விண்ணப்பிக்க: உயர்கல்வியில் சேர்ந்த பிறகு, கல்லூரி மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: http://socialjustice.nic.in/postmatric.php

போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் ஃபார் மைனாரிட்டி ஸ்டூடண்ட்ஸ்

வழங்குவது: மினிஸ்ட்ரி ஆஃப் மைனாரிட்டி அஃபயர்ஸ், மத்திய அரசு
யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் சேரும் மைனாரிட்டி மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும். +2 தேர்வில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமலிருக்க வேண்டும். மாநில அரசு பரிந்துரைக்கும் அனைவருக்கும் வழங்கப்படும்.
எவ்வளவு: கல்விக் கட்டணம், தங்குமிடக் கட்டணம் மற்றும் புத்தகங்கள் வாங்குவதற்கான தொகை முழுவதும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க: கல்லூரியில் சேர்ந்த பிறகு, கல்லூரி வாயிலாக விண்ணப்பிக்க
வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு:http://www.minorityaffairs.gov.in/
 
யங் சயின்ஸ் ஃபெல்லோஷிப் புரோகிராம்

வழங்குவது: இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், பெங்களூரு
யாருக்குக் கிடைக்கும்: +2 முடித்து உயர்
கல்வியில் அறிவியல் பயில்வதற்கு வழங்கப்படும் மிக உயரிய கல்வி உதவித்தொகை இது. இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
எவ்வளவு: மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய்
விண்ணப்பிக்க: ஜூலை மாதத்திற்குள்
அறிவிப்பு வெளியிடப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு: www.iisc.ernet.in
   
இந்தியன் கவுன்சில் ஆஃப் அக்ரிகல்ச்சர் ரிசர்ச் நேஷனல் டேலன்ட் ஸ்காலர்ஷிப்

வழங்குவது: இந்திய வேளாண் கல்வி மையம்
யாருக்குக் கிடைக்கும்: +2 முடித்து
இந்திய வேளாண் கல்வி மையம் (ஐசிஏஆர்) நடத்தும் நுழைவுத்தேர்வு மூலம் பி.எஸ்சி., பி.டெக்., பி.எப்.எஸ்சி., போன்ற படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்படும். சொந்த மாநிலத்தை விட்டு வேறு மாநிலம் சென்று படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
எவ்வளவு: மாதந்தோறும் ரூ.2000 ரூபாய்
விண்ணப்பிக்க: ஜூலை மாதத்துக்குள்
கூடுதல் விவரங்களுக்கு: www.icar.org.in
 
இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ஸ்காலர்ஷிப்

வழங்குவது: இஸ்லாமியக் கல்வி மையம்
யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று மெடிக்கல், பாராமெடிக்கல், மருத்துவம் சார்ந்த அறிவியல் படிப்புகள், சட்டம்,
பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிக்கும் ஏழை இஸ்லாமிய மாணவர்களில் தகுதியுள்ள அனைவருக்குமே கிடைக்கும்.
எவ்வளவு: படிப்புச் செலவு முழுமையும் கிடைக்கும்.
விண்ணப்பிக்க: ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: www.metdelhi.org

ரத்தன் டாடா ட்ரஸ்ட் ஸ்காலர்ஷிப் ஃபார் இந்தியன் ஸ்டூடண்ட்ஸ்

வழங்குவது : ரத்தன் டாடா ட்ரஸ்ட்
யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று
இந்தியக் கல்வி நிறுவனங்களில் பேச்சுலர் ஆஃப் பைன் ஆர்ட்ஸ் (BFA), சட்டம் படிக்கும் மாணவர்கள் 1000 பேருக்கு.
எவ்வளவு: படிப்புக்கான முழுத்தொகையும்
விண்ணப்பிக்க: மேற்கண்ட படிப்பு
களில் சேர்ந்த முதலாமாண்டில் ஆகஸ்ட்  
செப்டம்பர் மாதங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: http://www.srtt.org
     
சென்ட்ரல் செக்டார் ஸ்காலர்ஷிப் ஆஃப் டாப் க்ளாஸ் எஜுகேஷன் ஃபார் எஸ்.சி ஸ்டூடண்ட்ஸ்

வழங்குவது: மினிஸ்ட்ரி ஆஃப் சோஷியல் ஜஸ்டிஸ் அண்டு எம்பவர்மென்ட், மத்திய அரசு
யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று எஞ்சினியரிங், மருத்துவம், சட்டம், மேலாண்மை போன்ற படிப்புகளில் சேரும் எஸ்.சி பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். 1250 பேருக்கு வழங்கப்படும்.
எவ்வளவு: முழுமையான கல்விக் கட்டணம், தங்குமிடக் கட்டணம், கணிப்பொறி மற்றும் புத்தகங்கள் வாங்குவதற்கான கட்டணம்.
விண்ணப்பிக்க: கல்லூரியில் சேர்ந்த பின்பு, கல்லூரி முலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: http://socialjustice.nic.in/SchemeList/Send/27?mid=24541
 
மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்காலர்ஷிப் ட்ரஸ்ட் ஃபண்ட்

வழங்குவது: மினிஸ்ட்ரி ஆஃப் சோஷியல் ஜஸ்டிஸ் அண்டு எம்பவர்மென்ட், புது டெல்லியாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று பட்டப்படிப்பு அல்லது புரொபஷனல் படிப்புகளில் சேரும் 40%க்கு மேல் ஊனமுடைய மாணவர்களுக்கு வழங்கப்படும். குறைந்த
பட்சம் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். 2000 மாணவர்களுக்கு வழங்கப்படும். 30% பெண்களுக்கு.
எவ்வளவு: கல்விக் கட்டணம் முழுமையும் வழங்கப்படும். தவிர, படிப்புக்காலம் முழுமையும் மாதம் ரூ.2500 வீதம் 10 மாதங்
களுக்கு, புத்தகம் வாங்குவதற்கு 6000 ரூபாய் வழங்கப்படும். பார்வைத்திறன் மற்றும் கேட்புத்திறன் உபகரணங்கள் வாங்குவதற்கான தொகையும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க: ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் அனுப்பலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: http://socialjustice.nic.in/scholarships.php

தொகுப்பு: முத்து