ஆவின் நிறுவனத்தில் சீனியர் ஃபேக்டரி அசிஸ்டென்ட் பணி!வாய்ப்பு

275 பேருக்கு வாய்ப்பு!


தமிழக அரசின் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் பல்வேறு தொழிற்சாலைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: சீனியர் ஃபேக்டரி அசிஸ்டென்ட்பணியிடங்கள் : சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்  152, திருவண்ணாமலை  35, நீலகிரி  35, ஈரோடு  9, சேலம்  11, தஞ்சாவூர் - 33கல்வித்தகுதி : +2 அல்லது ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 1.1.2018 தேதியின்படி 18 - 30 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் www.omcaavinsfarecruitment.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.7.2018 மேலும் விவரங்களுக்கு http://www.omcaavinsfarecruitment.com/Aavin%20notification%20new%20english.pdf

நீட் தேர்வை எதிர்கொள்ள தரமான பயிற்சி வேண்டும்!

தேசிய அளவிலான Neet, IIT-JEE போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு அனுபவமிக்க ஆசிரியர்கள், ஸ்மார்ட் கிளாஸ் ரூம் என சர்வதேச தரத்திலான மாணவர்களை உருவாக்கும் வகையில் Tree of Information and Knowledge Academy (TIKA) செயல்படுகின்றது. இதன் சி.இ.ஓ. மற்றும் நிறுவனரான கிளிட்டஸ் ஃபிரட்டரிக் தங்கள் கல்வி நிறுவனத்தின் பயிற்சிமுறைகள் பர்றி விளக்கினார்.

‘‘தேசிய நுழைவுத் தேர்வுகளின் கோச்சிங் மட்டுமில்லாமல் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான டியூஷன், கார்ப்பரேட் டிரெய்னிங் கிளாஸ்கள், சார்டர்டு அக்கவுன்டன்ட் (CA) கோர்ஸ்கள் எனப் பல வகையான கற்றல் பயிற்சிகளை வழங்கிவருகிறோம். மேலும் இப்பயிற்சி நிறுவனத்தில் பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ஒன்று மற்றும் இரண்டு வருட கால அளவுள்ள பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது. நீட் தேர்வை எதிர்கொள்ள தரமான பயிற்சி தேவை. அப்படிப்பட்ட பயிற்சியை நாங்கள் வழங்குகின்றோம்.

அதிநவீன  வசதிகளுடன் செயல்படும் இந்நிறுவனத்தின் மூலம் இன்டர்நேஷனல் பள்ளிகளுக்கு இணையாக தரமான பயிற்சிமுறைகளை மாணவர்களுக்கு  வழங்குகிறோம். மேலும் 25 வருட அனுபவச் செறிவுள்ள ஆசிரியர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும் அத்துறை வல்லுநர்களைக் கொண்டு பாடம் நடத்தப்படுகிறது.

2009ம் ஆண்டில் இருந்து செயல்படும் இந்நிறுவனத்தில் கடந்த  ஆண்டு பயின்ற 24 மாணவர்களில் இருந்து 23 பேர் 95% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி அடைந்து இந்தியாவின் மிக முக்கிய உயர் நிறுவனங்களில் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் என வார இறுதி நாட்களில் நுழைவுத் தேர்வுக்கான வகுப்புகளையும், டியூஷன் மற்றும் கார்ப்பரேட் கிளாஸ்களை வேலை நேரம் முடிந்த பின்னரும் நடத்தி வருகிறோம்.’’ என்று கூறினார்.