வேலை ரெடி!வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

எஞ்சினியர்களுக்கு அலுமினிய கம்பெனியில் வேலை

நிறுவனம்: நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் எனும் மத்திய அரசின் அலுமினிய நிறுவனம்
வேலை: எஞ்சினியர்
காலியிடங்கள்: மொத்தம் 115. இதில் மெக்கானிக்கல் 54, எலக்ட்ரிக்கல் 32, மெட்டலர்ஜி 18, எலக்ட்ரானிக்ஸ் 5 மற்றும் இன்ஸ்ருமென்டேஷன் 6 இடங்கள் உள்ளன
கல்வித் தகுதி: துறை ரீதியாக எஞ்சினியரிங் டிகிரி முடித்திருப்பதோடு 2018 ‘கேட்’ தேர்விலும் தேர்வாகியிருக்கவேண்டும்
வயது வரம்பு: 30 க்குள்
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.5.18
மேலதிக தகவல்களுக்கு www.nalcoindia.com

மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவன வேலை

நிறுவனம்: போஸ்ட் கிரேஜுவேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் எஜுகேஷன் அண்ட் ரிச்ர்ச் எனும் மத்திய அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம், சண்டிகர் வேலை: சீனியர் ரெசிடெண்ட் எனும் மருத்துவக் கல்வியாளர் வேலை மற்றும் ஹாஸ்பிட்டல் அட்டண்டண்ட்
காலியிடங்கள்: மொத்தம் 130. இதில் முதல் வேலையில் 89 மற்றும் இரண்டாம் வேலையில் 15 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: முதல் வேலைக்கு எம்.டி மற்றும் எம்.எஸ் படிப்பும் இரண்டாம் வேலைக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும் அவசியம்
வயது வரம்பு: முதல் வேலைக்கு 30க்குள்ளும் இரண்டாம் வேலைக்கு 18 முதல் 37 வரை
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 23.5.18
மேலதிக தகவல்களுக்கு www.pgimer.edu.in

தமிழக அரசில் வேளாண் அதிகாரி பணி!

நிறுவனம்: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு மூலம் வழங்கப்படும் அக்ரிகல்ச்சர் ஆஃபிசர்  
வேலை: வேளாண் அதிகாரி
காலியிடங்கள்: மொத்தம் 192
கல்வித் தகுதி: வேளாண்துறை பட்டப்படிப்பு
வயது வரம்பு: பொதுப் பிரிவினர் 30க்குள்ளும் மற்றவர்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை
தேர்வு முறை: எழுத்து
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24.5.18
மேலதிக தகவல்களுக்கு www.tnpsc.gov.in

கப்பல் கட்டும் தளத்தில் தீயணைப்பு வீரர் வேலை

நிறுவனம்: மும்பை டாக்யார்ட் எனும் கப்பல் கட்டும் தளம், மும்பை
வேலை: தீயணைப்பு வீரர்(கிரேட் 1 மற்றும் கிரேட் 2 பிரிவுகளில்)
காலியிடங்கள்: மொத்தம் 95
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு
வயது வரம்பு: 18 முதல் 25 வரை
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.5.18
மேலதிக தகவல்களுக்கு www.bharatseva.com

மத்திய காவல்படைப் பிரிவுகளில் வேலை!

நிறுவனம்: யு.பி.எஸ்.சி-யின் சென்ட்ரல் ஆர்ம்ட் ஃபோர்ஸ் எனும் மத்திய காவல்படையின் பல்வேறு பிரிவுகளுக்கான தேர்வும் வேலைவாய்ப்பும்
வேலை: அசிஸ்டென்ட் கமாண்டண்ட் எனும் பதவியிலான வேலைகள்
காலியிடங்கள்: மொத்தம் 398. இதில் பி.எஸ்.எஃப் எனப்படும் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் படையில் 60, சி.ஆர்.பி.எஃப் 179, சி.ஐ.எஸ்.எஃப் 84, ஐ.டி.பி.பி 46 மற்றும் சாசாஸ்த்ர சீமாபல் 29 இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது
கல்வித் தகுதி: டிகிரி
வயது வரம்பு: 20 முதல் 25 வரை
தேர்வு முறை: எழுத்து, உடல்திறன் சோதனை மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.5.18
மேலதிக தகவல்களுக்கு www.upsc.gov.in

அணுமின் நிறுவனத்தில் பல்வேறு பணிகள்!

நிறுவனம்: என்.பி.சி.ஐ.எல். எனப்படும் தேசிய அணுமின் கழக நிறுவனத்தில் வேலை
வேலை: ஸ்டைபெண்டரி டெக்னீஷியன், சயின்டிஃபிக் அசிஸ்டென்ட், ஸ்டெனோ, லேப் டெக்னீஷியன், எக்ஸ்ரே டெக்னீஷியன், நர்ஸ் போன்ற வேலைகள்
காலியிடங்கள்: மொத்தம் 248
கல்வித் தகுதி: ஸ்டைபெண்டரி டிரெயினி வேலைக்கு 10 வது, ஐ.டி.ஐ, +2 படிப்பு போதும். மற்ற வேலைகளுக்கு அந்தந்தத் துறை தொடர்பாக டிகிரி படிப்பு அவசியம்
வயது வரம்பு: துறைகளுக்கு ஏற்ப வயது வேறுபடும்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24.5.18
மேலதிக தகவல்களுக்கு www.npcil.co.in

ஜிப்மரில் நர்ஸிங் ஆபீசர் பணி!

நிறுவனம்: புதுச்சேரியில் இருக்கும் ஜிப்மர் எனும் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ ஆய்வு நிறுவனம்
வேலை: லோயர் டிவிஷன் கிளர்க்(க்ரூப் சி) மற்றும் நர்ஸிங் ஆபீசர்
காலியிடங்கள்: மொத்தம் 115.
கல்வித் தகுதி: கிளர்க் வேலைக்கு +2 படிப்புடன் தட்டச்சு திறனும் நர்ஸிங் ஆபீசர் வேலைக்கு ஜெனரல் நர்ஸிங் அண்ட் மிட் வைஃபரி படிப்பில் டிப்ளமோ அல்லது டிகிரி படிப்பு அவசியம்
வயது வரம்பு: கிளர்க் வேலைக்கு 18 முதல் 30 வரை, நர்ஸ் வேலைக்கு 18 முதல் 35 வரை
தேர்வு முறை: கிளர்க் வேலைக்கு எழுத்து மற்றும் திறன் சோதனையும் நர்ஸ் வேலைக்கு எழுத்துத் தேர்வும் உண்டு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.5.18
மேலதிக தகவல்களுக்கு www.jipmer.edu.in

தொகுப்பு: டி.ரஞ்சித்