பிளாஸ்டிக் தொழில்நுட்பப் படிப்பில் மாணவர் சேர்க்கை!



அட்மிஷன்

சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளாஸ்டிக் எஞ்சினியரிங் டெக்னாலஜி நிறுவனம் சுருக்கமாக சிப்பெட் என்று அழைக்கப்படுகிறது. சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் 1968ம் ஆண்டு சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது சிப்பெட் நிறுவனம். மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான இது, நாட்டின் முக்கியமான பிளாஸ்டிக் தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாகத் திகழ்கிறது.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களோடு இணைந்து இந்த கல்வி நிறுவனம் செயல்படுகிறது  CIPET - பிளாஸ்டிக் தொழில்நுட்பத்திற்குத் தேவையான திறமையான வல்லுநர்களை உருவாக்கிடும் இலக்குடன் பட்டயம் (Diploma), முதுநிலைப் பட்டயம் (PG Diploma), இளநிலைப் பட்டம் (Under Graduation), முதுநிலைப் பட்டம் (Post Graduation), முனைவர் (Doctoral) படிப்புகளை வழங்குகிறது.

இந்நிறுவனத்தில் ஒன்றரை ஆண்டு கால அளவிலான நெகிழிச் செயல்முறைகள் மற்றும் சோதனை (Postgraduate Diploma in Plastics Processing & Testing) எனும் முதுநிலைப் பட்டயப்படிப்பு,  நெகிழி வார்ப்புரு வடிவமைப்பு (Post Diploma in Plastics Mould Design with CAD/CAM) எனும் மேம்பட்ட பட்டயப்படிப்பு, மூன்று ஆண்டு கால அளவிலான  நெகிழித் தொழில்நுட்பம் (Diploma in Plastics Technology), நெகிழி வார்ப்புருத் தொழில்நுட்பம் (Diploma in Plastics Mould Technology) எனும் இரண்டு பிரிவுகளிலான பட்டயப் படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

என்ன படிக்கலாம்? யார் விண்ணப்பிக்கலாம்?

நெகிழிச் செயல்முறைகள் மற்றும் சோதனை (Postgraduate Diploma in Plastics Processing & Testing) எனும் முதுநிலைப் பட்டயப்படிப்புக்கு வேதியியலை ஒரு பாடமாகக் கொண்டு, அறிவியலில் இளநிலைப் பட்டம் (B.Sc) பட்டம் பெற்றிருக்க வேண்டும். நெகிழி வார்ப்புரு வடிவமைப்பு (Post Diploma in  Plastics Mould Design with CAD/CAM) எனும் மேம்பட்ட பட்டயப்படிப்புக்கு மூன்றாண்டு கால அளவிலான இயந்திரப் பொறியியல் பாடங்களில் (Mechanical, Plastics Technology, Tool/Production/ Automobile Engineering, Mechatronics, Tool & Die Making, DPMT/DPT (CIPET)) ஏதாவதொன்றில் பட்டயப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நெகிழித் தொழில்நுட்பம் (Diploma in Plastics Technology), நெகிழி வார்ப்புருத் தொழில்நுட்பம் (Diploma in Plastics Mould Technology) எனும் இரு பட்டயப்படிப்புகளுக்கும் பத்தாம் வகுப்பில் 35% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.   மேற்காணும் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் முதுநிலைப் பட்டயப்படிப்பு மற்றும் மேம்பட்ட பட்டயப்படிப்புகளுக்கு 25 வயதுக்கு அதிகமாகாமலும், பட்டயப்படிப்புகளுக்கு 20 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகள் வரை வயதுத் தளர்வு உண்டு.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

இணைய வழியில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://cipetonline.com/ எனும் இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்துகொண்டும் விண்ணப்பிக்கலாம். வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. இணைய வழியிலான விண்ணப்பம் நிரப்பு வதற்கான வழிமுறைகள் இணையத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. விண்ணப்பிக்க/விண்ணப்பம் சென்றடையக் கடைசி நாள்: 27.6.2018.விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ.500, ஆதிதிராவிடர், பழங்குடியினர் ரூ.250, வெளிநாட்டினர் 50 யு.எஸ். டாலர் செலுத்த வேண்டும்.

நுழைவுத்தேர்வு

இப்படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியுடைய அனைவரும் மேற்காணும் இணையதளத்திலிருந்து நுழைவுச்சீட்டைத் (Hall Ticket) தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தமிழ்நாட்டில் சென்னை உட்பட இந்தியா முழுவதும் 21 இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இந்நிறுவனத்தின் மையங்களில் 1.7.2018 அன்று இணை நுழைவுத்தேர்வு (Joint Entrance Examination) நடத்தப்பெறும்.

மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர் Centre Head, CIPET, Thiruvika Industrial Estate Guindy,Chennai-600 032 என்ற முகவரியில் நேராகவோ அல்லது  044-22254701 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டோ தகவல்களைப் பெறலாம்.

- வசந்தி ராஜராஜன்