உதவித்தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்புகள்!



அட்மிஷன்

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் அடிப்படை அறிவியலுக்கான சத்யேந்திர நாத் போஸ் தேசிய மையம்(SNBNCBS) கொல்கத்தாவில் செயல்பட்டு வருகிறது. இந்திய அளவில் அறிவியல் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் முதன்மையாக விளங்கும் இக்கல்வி நிறுவனமானது இந்திய அரசு மற்றும் சர்வதேசக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து சர்வதேச தரத்தில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கிவருகிறது.

இக்கல்வி நிறுவனத்தில் ஹாஸ்டல் வசதி, உணவு மற்றும் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் செயல்படும் இக்கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு இலவசமாக ஆராய்ச்சிப் படிப்புகளும் வழங்கப்படுகிறது. அதன்படி 2018ம் ஆண்டிற்கான இயற்பியல், வேதியியல் மற்றும் பயலாஜிக்கல் சயின்ஸ் போன்ற துறைகளில் ஆராய்ச்சிப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

ஆராய்ச்சிப் படிப்புகள் சர்வதேச தரத்தில் ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் இக்கல்விநிறுவனத்தில் Astrophysics and Cosmology (AC), Department of Chemical Biological & Macro Molecular Science (CBMMS), Condensed Matter Physics and Materials Science (CMPMS), Theoritical Science (TS) போன்ற துறைகளில் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

கல்வித் தகுதி

வெவ்வேறு துறைகளில் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால் விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.bose.res.in என்ற இணையதளத்தில் முழுவிவரங்களைக் காணவும். மேலும் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, அப்ளைடு மேத்தமேட்டிக்ஸ் பயோபிசிக்ஸ் போன்ற துறைகளில் எம்.எஸ்சி/மாஸ்டர் டிகிரி முடித்த பொதுப்பிரிவு விண்ணப்பதார்கள் தங்கள் முதுகலையில் 60%, எஸ்.சி/எஸ்.டி மாணவர்கள் 55% பெற்றிருத்தல் அவசியம். அல்லது JEST நுழைவுத்தேர்வில் 160 ரேங்கிங் அல்லது GATE 400 ரேங்கிங் அல்லது CSIR NET-JRF and UGC-NET-JRF தேர்வுகளில் வென்றவர்கள் இணையதளம் சென்று முழுவிவரம் அறிந்து விண்ணப்பிக்க வேண்டும்.

வயதுவரம்பு

இந்திய அரசின் முதன்மைக் கல்விநிறுவனத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் முதுநிலை பட்டப்படிப்பை 2016க்குப் பின் முடித்தவராக இருத்தல் வயதுவரம்புத் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும்.

உதவித்தொகை

விண்ணப்பித்தவர்களில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.25,000, சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் மாணவர்களுக்கு ரூ.28,0000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் கொண்டு விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.bose.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 31.5.2018.
மேலும் விவரங்களுக்கு http://www.bose.res.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- துருவா