மீன்வள அறிவியல் பட்டம் படிக்க CIFNET நடத்தும் நுழைவுத்தேர்வு!



நுழைவுத்தேர்வு

இந்திய அரசால் நிறுவப்பட்டிருக்கும் மத்திய மீன்வளக் கப்பல்துறை அறிவியல் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனம் (Central Institute of Fisheries Nautical and Engineering Training) கேரள மாநிலம், கொச்சியில் செயல்பட்டுவருகிறது. இங்கு இடம்பெற்றிருக்கும் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

வழங்கப்படும் படிப்புகள்: இந்நிறுவனத்தில் நான்கு ஆண்டுக் கால அளவிலான மீன்வள அறிவியல் (கப்பல்துறை அறிவியல்) இளநிலைப் பட்டப்படிப்பு (Bachelor of Fishery Science (Nautical Science)) மற்றும் இரண்டு ஆண்டுக் கால அளவிலான கப்பல் மாலுமிப் பயிற்சி (Vessel Navigator Course (VNC)) மற்றும் கடல்சார் பொறியியல் பொருத்துநர் பயிற்சி (Marine Fitter Course (MFC)) ஆகிய தொழிற் சான்றிதழ் படிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன. 

இளநிலைப் பட்டப்படிப்பு: மீன்வள அறிவியல் (கப்பல்துறை அறிவியல்) இளநிலைப் பட்டப்படிப்பில் மொத்தம் 33 இடங்கள் இருக்கின்றன. இப்படிப்புச் சேர்க்கைக்கு +2 தேர்வில் ஆங்கிலம், கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் 50% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இந்த ஆண்டு தேர்வு எழுதியிருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பவர்களுக்கு 1.10.2017 அன்று 17 முதல் 20 வயதுக்குள் இருக்கவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்நிறுவனத்தின் http://cifnet.gov.in எனும் இணையதளதில் உள்ள விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகளை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப்பிரிவினர் ரூ.500, எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் ரூ.250 என வங்கி வரைவோலையினை (D.D.) “Senior Administrative Officer, CIFNET” எனும் பெயரில் “Ernakulam”-ல் மாற்றத்தக்க வகையில் பெற்று அனுப்பவேண்டும்.

நுழைவுத்தேர்வு: இப்படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்களில் பொது நுழைவுத்தேர்வு (Common Entrance Test) 10.6.2017 அன்று நடத்தப்படும்.மாணவர் சேர்க்கை: நுழைவுத்தேர்வுக்குப் பின்னர் நேர்காணல் ஒன்று நடத்தப்படும். அதன் பிறகு, நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் (50%), +2 மதிப்பெண்கள் (40%), நேர்காணல் (10%) எனக் கணக்கிடப்பட்டு, இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வணிகம் சார்ந்த கடல் துறையினால் (Mercantile Marine Department) நடத்தப்படும் பார்வைத் தகுதித் தேர்வில் (Vision Eye Test) தேர்ச்சி பெற்ற பின்பு சேர்க்கை உறுதி செய்யப்படும். தொழிற்சான்றிதழ் படிப்பு: இந்நிறுவனத்தின் தொழிற்சான்றிதழ் படிப்புகளில் கப்பல் மாலுமிப் பயிற்சிக்குக் கொச்சி  16 இடங்கள், சென்னை  16 இடங்கள், விசாகப்பட்டினம்  16 இடங்கள் என மூன்று பயிற்சி மையங்களிலும் மொத்தம் 48 இடங்கள் இருக்கின்றன. இதேபோல் கடல்சார் பொறியியல் பொருத்துநர் பயிற்சியிலும் 48 இடங்கள் இருக்கின்றன.

இப்படிப்புச் சேர்க்கைக்கு 10ஆம் வகுப்புத் தேர்வில் ஆங்கிலம், கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் 50% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இந்த ஆண்டு தேர்வு எழுதியிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரருக்கு 1.10.2017 அன்று 16 முதல் 20 வயதுக்குள் இருக்கவேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை வயதுத் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புவோர் மேலே குறிப்பிட்ட இணையதளத்திற்குச் சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப்பிரிவினர் ரூ.300, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.150 என வங்கி வரைவோலையை “Senior Administrative Officer, CIFNET” எனும் பெயரில் “Ernakulam”-ல் மாற்றத்தக்க வகையில் பெற்று அனுப்பவேண்டும்.

நுழைவுத்தேர்வு: இப்படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்குக் கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், டெல்லி, கொல்கத்தா, பூரி, பாட்னா, மங்களூர், போர்ட்பிளேர், பாண்டிச்சேரி மற்றும் காக்கிநாடா ஆகிய நகரங்களில் பொது நுழைவுத்தேர்வு 17.6.2017 அன்று நடத்தப்படும்.

மாணவர் சேர்க்கை: விண்ணப்பதாரர்கள் நுழைவுத்தேர்வு மற்றும் 10ஆம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றைக் கொண்டு, இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். கப்பல் மாலுமிப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வணிகம் சார்ந்த கடல் துறையினால் (Mercantile Marine Department) நடத்தப்படும் பார்வை தகுதித் தேர்வில் (Vision Eye Test) தேர்ச்சி பெற்ற பின்பே சேர்க்கை உறுதி செய்யப்படும். இப்பயிற்சிக்குத் திறந்தவெளிச் சேர்க்கையில் (Open Selection) சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 படிப்பு உதவித்தொகையாக வழங்கப்படும்.

மேலே குறிப்பிட்ட படிப்புகள் அனைத்துக்குமே ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, அதனை பிரின்ட்-அவுட் எடுத்துத் தேவையான சான்றிதழ் நகல்கள், வங்கி வரைவோலை ஆகியவற்றை இணைத்து “Director, Central Institute of Fisheries, Nautical and Engineering Training (CIFNET), Fine Arts Avenue, Fore Shore Road, Kochi-682016” எனும் முகவரிக்கு அனுப்பவேண்டும். விண்ணப்பம் சென்று சேரக் கடைசி நாள் 25.5.2017.

மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் மேற்காணும் இணையதளத்திற்குச் சென்று பார்வையிடலாம் அல்லது “Central Institute of Fisheries Nautical and Engineering Training, (CIFNET), Dewan’s Road, Kochi  682016” எனும் முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது 0484 - 2351493, 2351790, 2351610 எனும் தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டோ பெற்றுக்கொள்ளலாம்.

தொழிற் சான்றிதழ் படிப்பு குறித்த தகவலைச் சென்னையில் “Central Institute of Fisheries, Nautical & Engineering Training (CIFNET), No. 59, S.N.Street, Royapuram, Chennai600013” எனும் முகவரியில் இருக்கும் பயிற்சி நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது இந்நிறுவன அலுவலகத்தின் 044-25952691, 25952692 தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். 

- முத்துக்கமலம்