காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை!



அட்மிஷன்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் (Gandhigram Rural Institute  Deemed University) இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளில் 2017-2018ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகி யுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.
   
வழங்கப்படும் படிப்புகள்

இப்பல்கலைக்கழகத்தில் B.Com (Co Operation), B.A (Gandhian Social Work), BBA (Rural Industries Management), B.Sc (Maths / Physics / Chemistry / Home Science / Textile and Fashion Design) ஆகிய மூன்றாண்டுக் கால இளநிலைப் பட்டப்படிப்புகள், M.A (Development Administration/Sociology) எனும் ஐந்தாண்டுக் கால ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

  M.A (Tamil and Indian Literature / Hindi / English and Communicative Studies / Economics / Human Resource and Conflict Management / Sociology / Rural Development), M.Sc (Physics / Chemistry / Mathematics / Botany / Zoology / Microbiology / Food Science and Nutrition  Information Technology / Applied Geology and Geomatics / Geoinformatics) M.Com (Co-Operative Management) போன்ற முதுநிலைப் பட்டப்படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. PG Diploma in Spatial Technologies, P.G. Diploma in Sanitary Inspector’s Course மற்றும் PG Diploma in Yoga Education எனும் இரண்டாண்டு கால முதுநிலைப் பட்டதாரிப் பட்டயப் படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

இதுபோல் B.Tech (Civil Engineering), M.Tech (Renewable Energy), B.Sc. (Agri), MCA, MBA, BSc B.Ed (Integrated), B.Ed., M.Ed எனும் தொழில் சார்ந்த படிப்புகள், M.Phil (Tamil / English / Economics / Development Administration / Development Sociology / Physics / Chemistry / Food Science and Nutrition / Computer Science / Energy / Micro Level Planning / Research and Development / Futurology / Women’s Studies) எனும் ஆய்வியல் நிறைஞர் படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

B.Voc. (Farm Equipment Operation and Maintenance / Footwear and Accessories Design / Dairy Production and Technology) எனும் புதிய திறனடிப்படையிலான தொழிற்படிப்புகள்,  இதுபோல், Diploma in Textile Technology, Diploma in Agriculture ஆகிய இரண்டாண்டு காலப் பட்டயப்படிப்புகள், Post Diploma in Commercial Horticulture எனும் ஓராண்டுக் கால முதுநிலைப் பட்டயப்படிப்பு, Diploma in Two Wheeler Mechanism and Maintenance, Certificate in Two Wheeler Mechanism and Maintenance எனும் திறனடிப்படைப் படிப்புகள் என்று மொத்தம் 61 வகையான படிப்புகள் இப்பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

இது தவிர, இங்குள்ள படிப்புகளுடன் தொடர்புடைய துறைகளில் Ph.D ஆய்வுப் படிப்பு களும் இடம்பெற்றிருக்கின்றன.  கல்வித்தகுதி மற்றும் வயதுவரம்பு இப்படிப்புகள் ஒவ்வொன்றிலும் சேர்வதற்கான கல்வித்தகுதி குறித்த தகவல்கள் http://www.ruraluniv.ac.in எனும் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இ-பிராஸ்பெக்டஸ் என்று சொல்லப்படும் குறிப்பேட்டில் இடம்பெற்றிருக்கின்றன.

இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 1-7-2017 அன்று 21 வயதுக்கு அதிக மாகாமலும், P.G. Diploma in Sanitary Inspector’s படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் 25 வயதுக்கு அதிகமாகாமலும், B.Voc மற்றும் திறனடிப்படையிலான படிப்புகளுக்கு 35 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மூன்று ஆண்டுகள் வயதுத் தளர்வு உண்டு. மற்ற படிப்பு
களுக்கு வயது வரம்புகள் ஏதுமில்லை.

விண்ணப்பிக்கும் முறை

அனைத்துப் படிப்புகளுக்கும் பல்கலைக்கழக இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு படிப்புக்கும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500, பிஎச்.டி படிப்பிற்கு ரூ.2000 என கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஒரு படிப்புக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியான நாளிலிருந்து 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 19.5.2017.

மாணவர் சேர்க்கை வழிமுறை

இளநிலைப் பட்டப்படிப்பு, ஐந்து வருட ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு மாணவர்கள் +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், பி.டெக் மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டயப்படிப்பு மற்றும் எம்.பில் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு அடிப்படையிலும் இந்திய அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறையினைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெறும்.

நுழைவுத்தேர்வு

M.Tech (Renewable Energy) படிப்பிற்கு மாணவர்கள் பொறியியல் திறனாய்வுத் தேர்வில் (GATE) பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், காந்தி கிராமியப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு அடிப்படையிலும் என இரு வழிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

மேலும் கூடுதல் தகவல்களை அறிய மேற்காணும் இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது Director (Academic), The Gandhigram Rural Institute Deemed University, Gandhigram  624302, Dindigul District எனும் அஞ்சல் முகவரியிலோ அல்லது 0451  2452371 முதல் 2452375 வரையிலான தொலைபேசி எண்களிலோ, 8300545731 எனும் அலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு பெறலாம்.

  - முத்துக்கமலம்